Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காசிக்கு போகும் இளைஞர்களே ... தீராத துன்பம் தீர..
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இனிமை நிறைந்த உலகமிருக்கு.. இதிலே உனக்கு கவலை எதற்கு?
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 பிப்
2013
01:02

*கடவுளுக்கும், அவனது அடியார்களுக்கும் பணமுள்ளவர்கள் பொருள் வழங்க வேண்டும். ஏழைகள் அவனது திருநாமத்தை உச்சரிக்க வேண்டும்.
*வாழ்வில் துன்ப துயரங்களை அடைந்த பின்னர் தான் கடவுளைப் பலரும் தேடுகின்றனர். ஆனால், இளமையிலும், நன்றாக இருக்கிற காலத்திலும் இறைவனைத் தேடுபவனே பேறு பெற்றவன்.
* உங்கள் மனதில் குற்றம் இருப்பதாலேயே நீங்கள் துன்பப்படுகிறீர்கள். நல்ல நினைவுகளை மனதில் இருத்திக்கொண்டால், இதற்கு அவசியமே இராது.
* தவறுவது மனித இயல்பு. அதைப் பெரிதாக எண்ண வேண்டுவதில்லை. அதனை மீண்டும் மீண்டும் நினைப்பதால் துன்பமே அதிகரிக்கிறது.
*கருணையும் இரக்கமும் இல்லாத ஒருவனை மனிதன் என்று அழைக்க இயலாது.
*நம்பிக்கையும், மனஉறுதியும் நம் வாழ்விற்கு அடிப்படை. இவை இரண்டும் இருந்தால் வாழ்வில் எல்லாமே இருந்த மாதிரி தான்.
*இந்த உலகம் இனிமையான தோட்டம். இங்கே இறைவனை நேசிப்பவனுக்கு கவலை கிடையாது. எப்போதும் இறைசிந்தனையில் இருப்பவன் எதற்கும் அஞ்சுவதில்லை. அவன் புண்ணியவானும் கூட.
*மனமே எல்லாமுமாக இருக்கிறது. மனம் தூய்மை அடைந்தால் எல்லா நன்மையும் உண்டாகும்.
*உங்களுக்கு மன அமைதி வேண்டுமானால் பிறர் குற்றங்களைக் காணாதீர்கள். மாறாக உங்களது குற்றங்குறைகளை எண்ணிப் பாருங்கள்.
*ஏதாவது ஒரு உயிருக்கு மகிழ்ச்சியை உன்னால் அளிக்க முடியுமானால், உன் வாழ்வின் லட்சியம் நிறைவேறி விட்டதாக அர்த்தம்.
*சோம்பலாக இருப்பதால் உடல் மட்டுமில்லாமல் மனமும் கெட்டுப் போய் விடும். அதனால் எப்போதும் சுறுசுறுப்பாய் பணியில் ஈடுபடுங்கள்.
*ஒரு பொருள் அற்பமாக இருந்தால் கூட, அதை இகழ்ந்து பேசக்கூடாது. நீங்கள் ஒரு பொருளை மதித்தால் அதுவும் உங்களை மதிக்கும். செய்கிற செயல் மிக அற்பமானதாக இருந்தால் கூட, அதையும் மிக்க மரியாதையுடன் செய்ய வேண்டும்.
*ஏதேனும் கஷ்டம் வந்து விட்டால், தனியே அமர்ந்து கண்ணீர் மல்க கடவுளை வேண்டுங்கள். அவன் உங்கள் மனத்திலுள்ள அழுக்கையும், துயரத்தையும் போக்குவான். பின்பு, உங்களுக்கு எல்லாவற்றையும் விளங்கும்படி செய்வான்.
*மரணம் எப்போது நம்மை அணுகும் என்பது நிச்சயமில்லை. எனவே, ஒருவன் வாய்ப்பு கிட்டும்போதெல்லாம் நல்ல செயல்களைச் செயலாக்கி விட வேண்டும். அதற்கென, ஒரு குறிப்பிட்ட காலத்தை எதிர்பார்த்திருக்கக் கூடாது.
*நமக்கு முக்கியமானது அன்பே. இதன்மூலமே குடும்பம் முன்னேற வழியிருக்கிறது.
*சந்தனத்தை தொட்டால் கை மணப்பது போல, இறைவனைத் தியானித்தால் மனம் மணக்கும்.
சாரதாதேவியார்

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar