Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மனசு சுத்தமா இருக்கணும்! கடவுளால் நன்மை மட்டும் தானே ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இயற்கை அன்னை தந்ததெல்லாம் எல்லார்க்கும் சொந்தமடா!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 மார்
2013
04:03

தெய்வநிலையைத் தேடி கோயிலுக்கு செல்ல வேண்டியதுஇல்லை. மனிதனிடமே அது இருக்கிறது. மனிதன் தனக்குள் இருக்கும் தெய்வீகத்தை உணர்ந்து அதைப் பெற முயற்சிக்க வேண்டும். சாந்தம், பொறுமை, அருள், அன்பு முதலியவை தெய்வச் சார்புள்ளவை. கோபம், பொறாமை முதலியன விலங்குச் சார்புள்ளவை. இந்த இரண்டில் எதைச் சார்கிறானோ, அதுவாக மனிதன் மாறுகிறான். அன்பு வளரவளர அறியாமை அகலும். அன்பை ஒடுக்கிப் பகைமையை வளர்க்கும் இயக்கங்களில் சேரவோ, அவைகளுக்கு துணைபுரிவதோ கூடாது. அவைகளின் வாடை படாத முறையில் வாழ்வு நடத்த முயற்சிக்க வேண்டும். இயற்கை நம் அன்னை ஆவாள். நம் அனைவருக்கும் அவள் சொந்தமாவாள். காடுகளிலும், மலைகளிலும் புகுந்து ஆங்குள்ள இயற்கை வனப்பைக் கண்டு மகிழ்தல் வேண்டும்.

இறைவனே ஆண், பெண் மயமாக இருக்கும் போது, கணவன் மனைவி, தாய் பிள்ளை, தோழன் தோழி, சகோதர சகோதரிகள் ஒருவரை ஒருவர் வெறுப்பது இயற்கை நியதிக்கு மாறுபட்ட செயலாகும். தனக்கு ஒத்த கல்வி, குணம், உணவு முதலியவற்றை உடைய ஒருத்தியோடு ஒருவன் கூடி வாழ்ந்தால், அவளும் அவனும் கட்டழகு உடையவர்களாக உலகில் வாழ்வு நடத்துவர். வாழ்வில் கவலை இருக்கக் கூடாது, வாழ்வுக்குப் பகை கவலை. வாழ்க்கையின் இன்பத்தைக் கவலைகள் குலைத்து விடுவதால், கவலையை மறக்க வேண்டும்.

ஒவ்வொரு ஆண்மகனும், பெண்மகளும் முறையே தந்தை,தாயாகி அன்புத்தொண்டு செய்ய வேண்டும். தவறினால் வாழ்வின் நோக்கத்தை உணராமல் போவதுடன் வாழ்வும் வாழ்வாக அமையாது. ஒழுங்கைக் கடைபிடிப்பதால் மனிதன் வளம்பெறுகிறான். மனித வாழ்வுக்கு தேவைப்படும் பலவற்றுள் தலையாயது ஒழுக்கம். வீட்டிற்கு உயிர் போன்ற பெண்ணை இழிவாகக் கருதும் செயல், நாட்டை விட்டு என்று அகலுமோ, அன்றே
எல்லாருக்கும் நலம் விளையும். ஒவ்வொருவரும் தனக்கு வேண்டியவற்றை தானே செய்து கொள்ள வேண்டும். இது உலகத்திலுள்ள உயர்வு, தாழ்வு முதலிய வேற்றுமைகளை அறவே ஒழிப்பதுடன், அரசாட்சிகளையும் திருத்தும்.

விலங்கு மனம், குழந்தை மனம், மனித மனம், தெய்வ மனம் என்று மனக்கூறுகள் பலவாகப் பிரிக்கப்படுகிறது. இவைகளுள் விலங்கு மனமுடையவர்கள் கண்டதே காட்சி என்ற கொள்கையில் நிற்பர். அவர்களுக்கு நுண்ணிய ஆராய்ச்சியில் வெறுப்புத் தோன்றும். அவர்களது மனதில் பிரிவு, பகைமை, வஞ்சனை ஆகிய பேய்கள் குடி கொள்ளும். இதற்கு இடம் கொடுக்க கூடாது. உலகில் ஒருவனுக்குப் பெரும் பகையாய் இருந்து இடர் செய்வது தன்னலம். தன்னலத்தை போக்குவது எளிதல்ல, அதை வீழ்த்துவது வீரம். -திரு.வி.க

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar