Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருச்செந்தூர் கோயிலில் பங்குனி ... அண்ணாமலையார் கோவிலில் மண்டல பூஜை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கரிக்ககம் சாமுண்டி தேவி கோயில் பவனி 24ம் தேதி பொங்காலை
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மார்
2013
11:03

திருவனந்தபுரம்: கரிக்ககம் சாமுண்டி தேவி கோயில் பொங்காலை திருவிழாவை ஒட்டி இன்றும், நாளையும் பவனி நடக்கிறது. திருவனந்தபுரத்தில் இருந்து ஏழு கி.மீ., தொலைவில் கரிக்ககம் சாமுண்டி தேவி கோயில் உள்ளது. இந்த கோயில் 600 ஆண்டுகள் பழமையானது. பக்தர்கள் கேட்கும் வரங்களை அளிக்கும் அன்னையாக தேவி அருள் பாலித்து வருகின்றாள். முன் காலங்களில் திக்குபலி என்ற சடங்கிற்கு தேவி நகர்வலம் எழுந்தருளியிருந்தார். காலரா, வைசூரி போன்ற கொடிய நோய்கள் நாட்டில் பரவும் போது மக்களின் விருப்பப்படி அது போன்ற சடங்குகள் நடத்தப்பட்டிருந்தது. எழுந்தருளும் நிகழ்ச்சிக்கு பாரம்பரியமான முறையிலுள்ள வாத்திய மேளங்களும், ஆசார அனுஷ்டானங்களும் கட்டாயமாக கடைபிடித்திருந்தனர். சுமார் எட்டு கி. மீ., சுற்றளவில், நான்கு திசைகளிலும் இதன் பூஜைகளும், குருதியும் நடத்தியிருந்தனர். இன்று அவை திருவிழா தினங்களில் தேவியின் எழுந்தருளலாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சத்தியத்தின் சாட்சியாகவும் இக்கோயில் இன்று விளங்குகிறது. கரிக்ககம் சாமுண்டி கோயில் மகாமகம் திருவிழா கடந்த 18ம் தேதி துவங்கி 24ம் தேதி முடிய ஏழு நாள்கள் நடக்கிறது. முதல் நாள் விழாவில் சிறப்பு பஞ்சாமிர்த அபிஷேகம், அலங்கார தீபாராதனை, அஷ்ட திரவிய மகா கணபதிஹோமம், புஷ்பாபிஷேகம், அத்தாழபூஜை, பஜனை, நடிகை மஞ்சுவாரியார் பங்கேற்ற டான்ஸ் மற்றும் கேரளா அமைச்சர்கள் ஜோசப், சிவகுமார், நடிகர் தேவன் பங்கேற்ற சமயமாநாடு நடந்தது.

இரண்டாம் நாள் விழாவில் கலாசபிஷேகம், உச்சபூஜை, பகவதி சேவை, அன்னதானம், புஷ்பாபிஷேகம், பஜனை, சங்கீதரஜனை, தேவி பாராயணம், பஞ்சாரிமேளம், நடிகர் கலாபவன் மணியின் மெகாஷோ, மிமிக்கிரி போன்றவை நடந்தன. மூன்றாம் நாள் விழாவில் அபிஷேகம், அலங்கார தீபாராதனை, கணபதிஹோமம், சங்கீதரஜனை நடந்தது. நான்காம் நாள் விழாவில் பகவதிசேவை, புஷ்பாபிஷேகம், மத்திய அமைச்சர் வயலார் ரவி, சசிதரூர் முன்னிலையில் நடிகர் மம்மூட்டிக்கு கரிக்கத்தம்மா விருது வழங்கப்பட்டது. ஐந்தாம் நாள் விழாவான இன்று(22ம் தேதி) சன்னதியில் இருந்து கோவில் வகை புதுரோடு வழியாக இலங்கம் வயலில் ரோடு, கொல்ல பெருவழி, கொல்லம்ரோடு, சாருமூடு ரோடு, ஸ்ரீராகம் ரோடு, அரசமூடு, புதுப்பாலம் வழியாக எழுந்தருளல் நடக்கிறது. பின்னணி பாடகி ராஜலெஷ்மியின் இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. இரவு எழுந்தருளலுக்கு பின் தீபாராதனை நடக்கிறது. ஆறாம் நாள் விழாவில் கணபதிஹோமம், பந்தீரடி பூஜை, கலசாபிஷேகம், தொடர்ந்து கோவில் சன்னதியில் இருந்து ஆற்றுபரம்பு கொல்ல பெருவழி ரோடை கடந்து புன்னைகாதோப்பு, அரப்புரவிளாகம், சிவதாஸ் ரோடு, ஐ.டி.ஐ., ஜங்ஷன் வழியாக எழுந்தருளல் நடக்கிறது. மேடையில் கதகளி, களறிபயிற்று நடக்கிறது. ஏழாம் நாள் விழாவில் காலை 10.40க்கு பொங்காலை நடக்கிறது. பிற்பகல் 2.30க்கு உச்சபூஜை, பொங்காலை தர்ப்பணம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் டிரஸ்ட் சேர்மன் ராமசந்திரன்நாயர், தலைவர் முரளீதரன் நாயர், செயலாளர் அனில்குமார், உதவித்தலைவர் பிரதாபசந்திரன், பொருளாளர் பார்க்கவன் நாயர், இணைச்செயலாளர் கோபகுமார் தலைமையில் நிர்வாக அங்கத்தினர்கள் செய்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வியாழக்கிழமை குரு பகவானுக்கு உகந்த நாளாகும். இன்று பிரதோஷம் வருவது சிறந்ததாக கருதப்படுகிறது. பிரதோஷம் ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்த 55.72 சவரன் (445.76 கிராம்) ... மேலும்
 
temple news
திருச்சி; கே.கே.நகரில் அருள்பாலிக்கும், அலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
மும்பை: மும்பையில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 14 அன்று விமரிசையாகத் தொடங்கியது, ... மேலும்
 
temple news
சிவகங்கை ; நாட்டரசன் கோட்டை வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar