Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பரிபாடல் (பகுதி-1) பரிபாடல் (பகுதி-3)
முதல் பக்கம் » பரிபாடல்
பரிபாடல் (பகுதி-2)
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மார்
2013
05:03

பரிபாடல் - 5. செவ்வேள்

பாடியவர் :: கடுவன் இளவெயினனார்
இசையமைத்தவர் :: கண்ணனாகனார்
பண் :: பாலையாழ்

பாய் இரும் பனிக் கடல் பார் துகள் படப் புக்கு,
சேய் உயர் பிணிமுகம் ஊர்ந்து, அமர் உழக்கி,
தீ அழல் துவைப்பத் திரிய விட்டெறிந்து,
நோயுடை நுடங்கு சூர் மா முதல் தடிந்து,
வென்றியின் மக்களுள் ஒருமையொடு பெயரிய  5

கொன்று உணல் அஞ்சாக் கொடு வினைக் கொல் தகை
மாய அவுணர் மருங்கு அறத் தபுத்த வேல்,
நாவல்அம் தண் பொழில் வட பொழில் ஆயிடை,
குருகொடு பெயர் பெற்ற மால் வரை உடைத்து,
மலை ஆற்றுப் படுத்த மூ-இரு கயந்தலை!  10

வேலனது வெறிப்பாட்டு

மூ-இரு கயந்தலை, முந் நான்கு முழவுத் தோள்,
ஞாயிற்று ஏர் நிறத் தகை! நளினத்துப் பிறவியை!
காஅய் கடவுட் சேஎய்! செவ்வேள்!
சால்வ! தலைவ! எனப் பேஎ விழவினுள்,
வேலன் ஏத்தும் வெறியும் உளவே;  15

அவை வாயும் அல்ல, பொய்யும் அல்ல,
நீயே வரம்பிற்று இவ் உலகம் ஆதலின்;
சிறப்போய் சிறப்பு இன்றிப் பெயர்குவை;
சிறப்பினுள் உயர்பு ஆகலும்,
பிறப்பினுள் இழிபு ஆகலும்,  20

ஏனோர் நின் வலத்தினதே;

முருகப் பிரானின் பிறப்பு

ஆதி அந்தணன் அறிந்து பரி கொளுவ,
வேத மா பூண் வையத் தேர் ஊர்ந்து,
நாகம் நாணா, மலை வில்லாக,
மூவகை ஆர் எயில் ஓர் அழல்-அம்பின் முளிய,  25

மாதிரம் அழல, எய்து அமரர் வேள்விப்
பாகம் உண்ட பைங் கட் பார்ப்பான்
உமையொடு புணர்ந்து, காம வதுவையுள்,
அமையாப் புணர்ச்சி அமைய, நெற்றி
இமையா நாட்டத்து ஓரு வரம் கொண்டு,  30

விலங்கு என, விண்னோர் வேள்வி முதல்வன்
விரி கதிர் மணிப் பூணவற்குத் தான் ஈத்தது
அரிது என மாற்றான், வாய்மையன் ஆதலின்,
எரி கனன்று ஆனாக் குடாரி கொண்டு அவன் உருவு
திரித்திட்டோன், இவ் உலகு ஏழும் மருள;  35

கருப் பெற்றுக் கொண்டோர், கழிந்த சேய் யாக்கை
நொசிப்பின், ஏழ் உறு முனிவர், நனி உணர்ந்து,
வசித்ததைக் கண்டம் ஆக மாதவர்,
மனைவியர், நிறைவயின், வசி தடி சமைப்பின்,
சாலார்; தானே தரிக்க என, அவர் அவி  40

உடன் பெய்தோரே, அழல் வேட்டு; அவ் அவித்
தடவு நிமிர் முத் தீப் பேணிய மன் எச்சில்,
வடவயின், விளங்கு ஆல், உறை எழு மகளிருள்
கடவுள் ஒரு மீன் சாலினி ஒழிய,
அறுவர் மற்றையோரும் அந் நிலை அயின்றனர்;  45

மறு அறு கற்பின் மாதவர் மனைவியர்
நிறைவயின் வழா அது நிற் சூலினரே;
நிவந்து ஓங்கு இமயத்து நீலப் பைஞ் சுனைப்
பயந்தோர் என்ப, பதுமத்துப் பாயல்;
பெரும் பெயர் முருக! நிற் பயந்த ஞான்றே,  50

அரிது அமர் சிறப்பின் அமரர்செல்வன்,
எரி உமிழ் வச்சிரம் கொண்டு, இகந்து வந்து, எறிந்தென,
அறு வேறு துணியும் அறுவர் ஆகி,
ஒருவனை; வாழி, ஓங்கு விறல் சேஎய்!

தேவர் சேனைக்குத் தலைவனாதல்

ஆரா உடம்பின் நீ அமர்ந்து விளையாடிய  55

போரால் வறுங் கைக்குப் புரந்தரன் உடைய,
அல்லல் இல் அனலன் தன் மெய்யின் பிரித்து,
செல்வ வாரணம் கொடுத்தோன்; வானத்து
வளம் கெழு செல்வன் தன் மெய்யின் பிரித்துத்
திகழ் பொறிப் பீலி அணி மயில் கொடுத்தோன்;  60

திருந்து கோல் ஞமன் தன் மெய்யின் பிரிவித்து,
இருங் கண் வெள் யாட்டு எழில் மறி கொடுத்தோன்;
ஆஅங்கு அவரும் பிறரும் அமர்ந்து படை அளித்த
மறியும், மஞ்ஞையும், வாரணச் சேவலும்,
பொறி வரிச் சாபமும், மரனும், வாளும்,  65

செறி இலை ஈட்டியும், குடாரியும், கணிச்சியும்
தெறு கதிர்க் கனலியும் மாலையும் மணியும்,
வேறு வேறு உருவின் இவ் ஆறு இரு கைக் கொண்டு,
மறு இல் துறக்கத்து அமரர் செல்வன்தன்
பொறி வரிக் கொட்டையொடு புகழ் வரம்பு இகந்தோய்.  70

முருகன் திருவடி அடைவோரும் அடையாதோரும்

நின் குணம் எதிர்கொண்டோர் அறம் கொண்டோர் அல்லதை,
மன் குணம் உடையோர் மாதவர் வணங்கியோர் அல்லதை-
செறு தீ நெஞ்சத்துச் சினம் நீடினோரும்,
சேரா அறத்துச் சீர் இலோரும்,
அழி தவப் படிவத்து அயரியோரும்,  75

மறு பிறப்பு இல் எனும் மடவோரும், சேரார்
நின் நிழல்;

முருகப் பெருமானிடம் வேண்டுதல்

அன்னோர் அல்லது இன்னோர்
சேர்வார் ஆதலின், யாஅம் இரப்பவை
பொருளும் பொன்னும் போகமும் அல்ல; நின்பால்
அருளும், அன்பும், அறனும், மூன்றும்-
உருள் இணர்க் கடம்பின் ஒலி தாரோயே!  81

பரிபாடல் - 6. வையை


பாடியவர் :: நல்லந்துவனார்
இசையமைத்தவர் :: மருத்துவன் நல்லச்சுதனார்
பண் :: பாலையாழ்

வைகையில் பெரு வெள்ளம்

நிறை கடல் முகந்து உராய், நிறைந்து, நீர் துளும்பும் தம்
பொறை தவிர்பு அசைவிடப் பொழிந்தன்று, வானம்;
நிலம் மறைவது போல் மலிர் புனல் தலைத் தலைஇ,
மலைய இனம் கலங்க, மலைய மயில் அகவ,
மலை மாசு கழியக் கதழும் அருவி இழியும்  5

மலி நீர் அதர் பல கெழுவு தாழ் வரை,
மாசு இல் பனுவற் புலவர் புகழ் புல
நாவின் புனைந்த நன் கவிதை மாறாமை,
மேவிப் பரந்து விரைந்து, வினை நந்தத்
தாயிற்றே தண் அம் புனல்.  10

புதுப் புனலாட முற்படும் மகளிரது செயல்
புகை, பூ, அவி ஆராதனை, அழல், பல ஏந்தி,
நகை அமர் காதலரை நாளணிக் கூட்டும்
வகைசாலும், வையை வரவு.
வையையின் கரை உடைதலும், ஊரார்கிளர்ந்து எழுதலும்
தொடி தோள் செறிப்பத் தோள்வளை இயங்கக்
கொடி சேரா, திருக் கோவை காழ் கொளத்  15

தொகு கதிர் முத்துத் தொடை கலிழ்பு மழுக,
உகிரும் கொடிறும் உண்ட செம் பஞ்சியும்,
நகில் அணி அளறு நனி வண்டல் மண்ட,
இலையும் மயிரும் ஈர்ஞ் சாந்து நிழத்த,
முலையும் மார்பும் முயங்கு அணி மயங்க,  20

விருப்பு ஒன்றுபட்டவர் உளம் நிறை உடைத்தென,
வரைச் சிறை உடைத்ததை வையை:  வையைத்
திரைச் சிறை உடைத்தன்று கரைச்சிறை; அறைக எனும்
உரைச் சிறைப் பறை எழ, ஊர் ஒலித்தன்று

மைந்தரும் மகளிரும் நீராடச் செல்லல்

அன்று, போர் அணியின் புகர்முகம் சிறந்தென,  25

நீர் அணி அணியின் நிரைநிரை பிடி செல:
ஏர் அணி அணியின் இளையரும் இனியரும்--
ஈரணி அணியின், இகல் மிக நவின்று,
தணி புனல் ஆடும் தகை மிகு போர்க்கண்
துணி புனல் ஆக, துறை வேண்டும் மைந்தின்  30

அணி அணி ஆகிய தாரர், கருவியர்,
அடு புனலது செல அவற்றை இழிவர்;
கைம்மான் எருத்தர், கலி மட மாவினர்,
நெய்ம் மாண் சிவிறியர், நீர் மணக் கோட்டினர்,
வெண் கிடை மிதவையர், நன் கிடைத் தேரினர்,  35

சாரிகை மறுத்துத் தண்டா உண்டிகை
ஓர் இயவு உறுத்தர ஊர்ஊர்பு இடம் திரீஇச்

ஆற்றினது நீரோட்டம்

சேரி இளையர் செல அரு நிலையர்,
வலியர் அல்லோர் துறைதுறை அயர,
மெலியர் அல்லோர் விருந்து புனல் அயர,  40

சாறும் சேறும் நெய்யும் மலரும்
நாறுபு நிகழும், யாறு வரலாறு.

அந்தணர்கள் கொண்ட கலக்கம்

நாறுபு நிகழும் யாறு கண்டு, அழிந்து
வேறுபடு புனல் என, விரை மண்ணுக் கலிழை,
புலம் புரி அந்தணர் கலங்கினர், மருண்டு.  45

பிறரும் சேறு கலந்த புனல் கண்டு நீங்குதல்

மாறு மென் மலரும், தாரும் கோதையும்,
வேரும் தூரும், காயும் கிழங்கும்,
பூரிய மாக்கள் உண்பது மண்டி
நார் அரி நறவம் உகுப்ப நலன் அழிந்து,
வேறாகின்று இவ் விரி புனல் வரவு என,  50

சேறு ஆடு புனலது செலவு

வரை அழி வால் அருவி வாதாலாட்ட,
கரை அழி வால் அருவிக் கால் பாராட்ட,
இரவில் புணர்ந்தோர் இடைமுலை அல்கல்
புரைவது பூந் தாரான் குன்று எனக் கூடார்க்கு  55

உரையோடு இழிந்து உராய், ஊரிடை ஓடிச்,
சலப் படையான் இரவில் தாக்கியது எல்லாம்
புலப்படப் புன்அம் புலரியின் நிலப்படத்
தான் மலர்ந்தன்றே
தமிழ் வையைத் தண்ணம் புனல்.  60

இற்பரத்தையுடன் நீராடிய தலைமகன் காதற்பரத்தைக்கு வையை நீர் விழவு கூறியது

காதற்பரத்தையின் வினாவும் தலைமகன் மறுமொழியும்


விளியா விருந்து விழுவார்க்குக் கொய்தோய்,
தளிர் அறிந்தாய், தாம் இவை.

களவு வெளிப்பட்டது எனக் காதற்பரத்தை உரைத்தல்

பணிபு ஒழி பண்ப!--பண்டெல்லாம் நனி உருவத்து;
என்னோ துவள் கண்டீ?--
எய்தும் களவு இனி: நின் மார்பின் தார் வாடக்  65

கொய்ததும் வாயாளோ? கொய் தழை கை பற்றிச்
செய்ததும் வாயாளோ? செப்பு.

தளிரின் துவட்சிக்கு வையைப் பெருக்குக் காரணம் என

புனை புனை ஏறத் தாழ்த்ததை; தளிர் இவை
நீரின் துவண்ட; சேஎய் குன்றம்; காமர்
பெருக்கு அன்றோ, வையை வரவு?  70

தலைவன் உரையை உண்மை அன்று என, அவள் மறுத்து உரைத்தல்

ஆம் ஆம்; அது ஒக்கும்; காதல்அம் காமம்
ஒருக்க ஒருதன்மை நிற்குமோ? ஒல்லைச்
சுருக்கமும் ஆக்கமும் --- சூள் உறல்!--- வையைப்
பெருக்கு அன்றோ? பெற்றாய் பிழை.
அருகு பதியாக அம்பியின் தாழ்ப்பிக்கும்,  75

குருகு இரை தேரக் கிடக்கும்சுசுசுபொழி காரில்,
இன் இளவேனில், இது அன்றோ வையை? நின்
வையை வயமாக வை.
செல் யாற்றுத் தீம் புனலில் செல் மரம் போல,
வவ்வு வல்லார் புணை ஆகிய மார்பினை;  80

என்னும் பனியாய் இரவெல்லாம் வைகினை;
வையை உடைந்த மடை அடைத்தக்கண்ணும்
பின்னும் மலிரும் பிசிர் போல, இன்னும்
அனற்றினை துன்பு அவிய, நீ அடைந்தக்கண்ணும்,
பனித்துப் பனி வாரும் கண்ணவர் நெஞ்சம்  85

கனற்றுபு காத்தி, வரவு!

தலைமகன் மேலும் கூறுதல்

நல்லாள் கரை நிற்ப, நான் குளித்த பைந் தடத்து,
நில்லாள் திரை மூழ்கி நீங்கி எழுந்து, என்மேல்
அல்லா விழுந்தாளை எய்தி, எழுந்து ஏற்று யான்
கொள்ளா அளவை, எழுந் தேற்றாள்: கோதையின்  90

உள் அழுத்தியாள் எவளோ? தோய்ந்தது யாது? என--

காதற் பரத்தை கூற்று

தேறித் தெரிய உணர் நீ: பிறிதும் ஓர்
யாறு உண்டோ? இவ் வையை யாறு .

தலைமகன் பின்னும் சூளுற்று உரைத்தமை

இவ் வையை யாறு என்ற மாறு என்னை? கையால்
தலை தொட்டேன், தண் பரங்குன்று!  95

விறலிக்குத் தலைமகள் கூறுதல்

சினவல்; நின் உண்கண் சிவப்பு அஞ்சுவாற்குத்
துனி நீங்கி, ஆடல் தொடங்கு; துனி நனி
கன்றிடின் காமம் கெடூஉம்; மகள்; இவன்
அல்லா நெஞ்சம் உறப் பூட்டக் காய்ந்தே
வல் இருள் நீயல்; அது பிழையாகும் என,  100

இல்லவர் ஆட, இரந்து பரந்து உழந்து
வல்லவர் ஊடல் உணர்த்தர, நல்லாய்!
களிப்பர்; குளிப்பர்; காமம் கொடி விட,
அளிப்ப, துனிப்ப, ஆங்காங்கு ஆடுப;
ஆடுவார் நெஞ்சத்து அலர்ந்து அமைந்த காமம்
வாடற்க, வையை! நினக்கு.  106

பரிபாடல் - 7. வையை

(தலைமகன் தலைமகளோடு புனல் ஆடினான் எனக் கேட்டு இன்புற்ற செவிலித்தாய், தோழியை,
நீங்கள் ஆடிய புனலணி இன்பம் கூறுக என்றாட்கு, அப் புனலாணி இன்பமும், பல்வேறு வகைப்பட்ட
இன்பமும், தலைமகன் காதன்மையும், கூறி, என்றும் இந்த நீரணி இன்பம் பெறுக, யாம் என்றது.)

பாடியவர் :: மையோடக் கோவனார்
இசையமைத்தவர் :: பித்தாமத்தர்
பண் :: பாலையாழ்


வையைப் புனலின் வருகை

திரை இரும் பனிப் பௌவம் செவ்விதா அற முகந்து,
உர உரும் உடன்று ஆர்ப்ப, ஊர் பொறை கொள்ளாது,
கரை உடை குளமெனக் கழன்று, வான் வயிறு அழிபு,
வரைவரை தொடித்த வயங்கு வெள் அருவி--
இரவு இருள் பகலாக, இடம் அரிது செலவு என்னாது,  5

வலன் இரங்கு முரசின் தென்னவர் உள்ளிய
நிலன் உற நிமிர் தானை நெடு நிரை நிவப்பு அன்ன--
பெயலான் பொலிந்து, பெரும் புனல் பல நந்த,
நலன் நந்த நாடு அணி நந்தப் புலன் நந்த
வந்தன்று, வையைப் புனல்.  10

புனலின் செயல்

நளி இருஞ் சோலை நரந்தம் தாஅய்,
ஒளிர் சினை வேங்கை விரிந்த இணர் உதிரலொடு,
துளியின் உழந்த தோய்வு அருஞ் சிமைதொறும்
வளி வாங்கு சினைய மா மரம் வேர் கீண்டு,
உய்ர்ந்துழி உள்ளன பயம்பிடைப் பரப்பி;  15

உழவர் களி தூங்க, முழவு பணை முரல,
ஆடல் அறியா அரிவை போலவும்,
ஊடல் அறியா உவகையள் போலவும்,
வேண்டு வழி நடந்து, தாங்கு தடை பொருது;
விதி ஆற்றான் ஆக்கிய மெய்க் கலவை போலப்  20

பொது நாற்றம் உள்உள் கரந்து, புது நாற்றம்
செய்கின்றே, செம் பூம் புனல்.

வெள்ளப் பெருக்கைக் கண்ட மக்களின் செயல்

கவிழ்ந்த புனலின் கயம் தண் கழுநீர்
அவிழ்ந்த மலர் மீதுற்றென, ஒருசார்;
மாதர் மடநல்லார், மணலின் எழுதிய  25

பாவை சிதைத்தது என அழ, ஒருசார்;
அகவயல் இள நெல் அரிகால் சூடு
தொகு புனல் பரந்தெனத் துடி பட, ஒருசார்;
ஓதம் சுற்றியது ஊர் என, ஒருசார்;
கார் தூம்பு அற்றது வான் என, ஒருசார்;  30

பாடுவார் பாக்கம் கொண்டென,
ஆடுவார் சேரி அடைந்தென,
கழனி வந்து கால் கோத்தென,
பழன வாளை பாளை உண்டென,
வித்து இடு புலம் மேடு ஆயிற்றென,  35

உணர்த்த உணரா ஒள் இழை மாதரைப்
புணர்த்திய இச்சத்துப் பெருக்கத்தின் துனைந்து,
சினை வளர் வாளையின் கிளையொடு கெழீஇ,
பழன உழவர், பாய் புனல் பரத்தந்து,

வையைப் புனலின் வனப்பு

இறு வரை புரையுமாறு இரு கரை ஏமத்து,  40

வரை புரை உருவின் நுரை பல சுமந்து,
பூ வேய்ந்து, பொழில் பரந்து;
துனைந்து ஆடுவார் ஆய் கோதையர்,
அலர் தண் தாரவர், காதில்
தளிர் செரீஇ, கண்ணி பறித்து;  45

கை வளை, ஆழி, தொய்யகம், புனை துகில்,
மேகலை, காஞ்சி, வாகுவலயம்,
எல்லம் கவரும் இயல்பிற்றாய்: தென்னவன்
ஒன்னார் உடை புலம் புக்கற்றால்---மாறு அட்ட
தானையான் வையை வனப்பு.  50

தோழி புனலணி இன்பம் கூறுதல்

புரிந்த தகையினான் யாறு ஆடுவாருள்
துரந்து புனல் தூவ, தூ மலர்க் கண்கள்
அமைந்தன; ஆங்கண், அவருள் ஒருத்தி,
கை புதைஇய வளை
ஏக்கழுத்து நாணான் கரும்பின் அணை மென் தோள்  55

போக்கிச் சிறைப்பிடித்தாள்; ஓர் பொன் அம் கொம்பு
பரிந்து அவளைக் கைப் பிணை நீக்குவான் பாய்வாள்;
இரும்பு ஈர் வடி ஒத்து மை விளங்கும் கண் ஒளியால்
செம்மைப் புதுப் புனல் சென்று இருளாயிற்றே;
வையைப் பெருக்கு வடிவு.  60

தோழி தலைமகன் காதன்மை கூறுதல்

விரும்பிய ஈரணி மெய் ஈரம் தீர,
சுரும்பு ஆர்க்கும் சூர் நறா ஏந்தினாள் கண் நெய்தல்;
பேர் மகிழ் செய்யும் பெரு நறாப் பேணியவே,
கூர் நறா ஆர்ந்தவள் கண்.
கண் இயல் கண்டு ஏத்தி, காரிகை நீர் நோக்கினைப்  65

பாண் ஆதரித்துப் பல பாட; அப் பாட்டுப்
பேணாது ஒருத்தி பேதுற; ஆயிடை,
என்னை வருவது எனக்கு? என்று, இனையா,
நன் ஞெமர் மார்பன் நடுக்குற, நண்ணி;
சிகை கிடந்த ஊடலின் செங் கண் சேப்பு ஊர,  70

வகை தொடர்ந்த ஆடலுள் நல்லவர் தம்முள்
பகை தொடர்ந்து, கோதை பரியூஉ, நனி வெகுண்டு,
யாறு ஆடு மேனி அணி கண்ட தன் அன்பன்
சேறு ஆடு மேனி திருநிலத்து உய்ப்ப, சிரம் மிதித்து,
தீர்விலதாகச் செருவுற்றாள்சுசுசு செம் புனல்  75

ஊருடன் ஆடுங்கடை.

தோழி வையையின் நீரணியின்பம் குறித்துக் கூறுதல்

புரி நரம்பு இன் கொளைப் புகல் பாலை ஏழும்
எழூஉப் புணர் யாழும், இசையும், கூட;
குழல் அளந்து நிற்ப; முழவு எழுந்து ஆர்ப்ப;
மன் மகளிர், சென்னியர், ஆடல் தொடங்க;  80

பொருது இழிவார் புனல் பொற்பு-அது
உரும் இடி சேர்ந்த முழக்கம் புரையும்
திருமருதமுன்துறை சேர் புனற்கண் துய்ப்பார்
தாமம் தலை புனை பேஎம் நீர் வையை!
நின் பயம் பாடி விடிவுற்று ஏமாக்க---  85

நின் படிந்து நீங்காமை இன்று புணர்ந்தெனவே.

பரிபாடல் - 8. செவ்வேள்

கடவுள் வாழ்த்து

பாடியவர் :: நல்லந்துவனார்
இசையமைத்தவர் :: மருத்துவன் நல்லச்சுதனார்
பண் :: பாலையாழ்


திருப்பரங்குன்றத்தின் அமைப்பும் சிறப்பும்

மண்மிசை---அவிழ்துழாய் மலர்தரு செல்வத்துப்
புள்மிசைக் கொடியோனும், புங்கவம் ஊர்வோனும்,
மலர்மிசை முதல்வனும், மற்று அவனிடைத் தோன்றி
உலகு இருள் அகற்றிய பதின்மரும், இருவரும்,
மருந்து உரை இருவரும், திருந்து நூல் எண்மரும்,  5

ஆதிரை முதல்வனின் கிளந்த
நாதர் பன்னொருவரும், நன் திசை காப்போரும்,
யாவரும், பிறரும், அமரரும், அவுணரும்,
மேஅரு முதுமொழி விழுத் தவ முதல்வரும்---
பற்றாகின்று, நின் காரணமாக;  10

பரங்குன்று இமயக் குன்றம் நிகர்க்கும்.
இமயக் குன்றினில் சிறந்து
நின் ஈன்ற நிரை இதழ்த் தாமரை
மின் ஈன்ற விளங்கு இணர் ஊழா
ஒருநிலைப் பொய்கையோடு ஒக்கும்--- நின் குன்றின்  15

அருவி தாழ் மாலைச் சுனை.
முதல்வ! நின் யானை முழக்கம் கேட்ட
கதியிற்றே காரின் குரல்.
குரல் கேட்ட கோழி குன்று அதிரக் கூவ,
மத நனி வாரணம் மாறுமாறு அதிர்ப்ப,  20

எதிர்குதிர் ஆகின்று அதிர்ப்பு, மலை முழை.

குன்றத்திற்கும் கூடாக்கும் இடையிலுள்ள வழி

ஏழ் புழை ஐம் புழை யாழ் இசை கேழ்த்து அன்ன, இனம்
வீழ் தும்பி வண்டொடு மிஞிறு ஆர்ப்ப, சுனை மலர,
கொன்றை கொடி இணர் ஊழ்ப்ப, கொடி மலர்
மன்றல மலர, மலர் காந்தள் வாய் நாற,  25

நன்று அவிழ் பல் மலர் நாற, நறை பனிப்ப,
தென்றல் அசைவரூஉம் செம்மற்றே-- அம்ம! நின்
குன்றத்தான் கூடல் வரவு.

குன்றத்தின் முழக்கம்

குன்றம் உடைத்த ஒளிர் வேலோய்! கூடல்
மன்றல் கலந்த மணி முரசின் ஆர்ப்பு எழ,  30

காலொடு மயங்கிய கலிழ் கடலென,
மால் கடல் குடிக்கும் மழைக் குரலென,
ஏறு அதிர்க்கும் இந்திரன் இரும் உருமென,
மன்றல் அதிரதிர மாறுமாறு அதிர்க்கும் --நின்
குன்றம் குமுறிய உரை.  35

தலைமகன் தலைமகட்குக் குன்றத்தின் சிறப்புக் கூறுதல்

தூது ஏய வண்டின் தொழுதி முரல்வு அவர்
காதல் மூதூர் மதில் கம்பலைத்தன்று;
வடு வகிர் வென்ற கண், மாந் தளிர் மேனி,
நெடு மென் பணைத் தோள், குறுந் தொடி, மகளிர்
ஆராக் காமம், ஆர் பொழிற் பாயல்,  40

வரையகத்து, இயைக்கும் வரையா நுகர்ச்சி;
முடியா நுகர்ச்சி முற்றாக் காதல்,
அடியோர் மைந்தர் அகலத்து அகலா
அலர் ஞெமல் மகன்றில் நன்னர்ப் புணர்ச்சி,
புலரா மகிழ்; மறப்பு அறியாது நல்கும்  45

சிறப்பிற்றே---தண் பரங்குன்று.

தலைமகள் புலந்து உரைத்தல்

இனி, மன்னும் ஏதிலர் நாறுதி; ஆண்டுப்
பனி மலர்க் கண்ணாரோடு ஆட--நகை மலர்
மாலைக்கு மாலை வரூஉம்; வரை சூள் நில்--
காலைப் போய் மாலை வரவு.  50

தலைமகன் சூளும் தலைவி விலகலும்
இனி மணல் வையை இரும் பொழிலும், குன்றப்
பனி பொழி சாரலும், பார்ப்பாரும்;....
துனியல், மலருண்கண்! சொல் வேறு; நாற்றம்
கனியின் மலரின் மலிர் கால் சீப்பு இன்னது;
துனியல் நனி நீ நின் சூள்.  55

தோழி தலைமகனைச் சூள் விலகக்கூறுதல்

என் பாணி நில் நில்---எலாஅ!--பாணி நீ, நின் சூள்;
சான்றாளர் ஈன்ற தகாஅத் தகாஅ மகாஅன்!--
ஈன்றாட்கு ஒரு பெண், இவள்.
இருள் மை ஈர் உண் கண் இலங்கு இழை ஈன்றாட்கு
அரியளோ? ஆவது அறிந்திலேன்; ஈதா;  60

வரு புனல் வையை மணல் தொட்டேன்; தரு மண வேள்
தண் பரங்குன்றத்து அடி தொட்டேன் என்பாய்;
கேளிர் மணலின் கெழுவும் இதுவோ?
ஏழ் உலகும் ஆளி திரு வரைவேல் அன்பு அளிதோ?
என்னை அருளி அருள் முருகு சூள் சூளின்,  65

நின்னை அருள் இல் அணங்கான் மெய் வேல் தின்னும்;
விறல் வெய்யோன் ஊர் மயில், வேல் நிழல், நோக்கி;
அறவர் அடி தொடினும், ஆங்கு அவை சூளேல்;
குறவன் மகள் ஆணை கூறு ஏலா! கூறேல்;
ஐய! சூளின், அடி தொடு குன்றொடு  70

வையைக்குத் தக்க மணல் சீர் சூள் கூறல்!

தலைமகனது உரை

யார் பிரிய, யார் வர, யார் வினவ, யார் செப்பு?
நீர் உரைசெய் நீர்மை இல் சூள் என்றி, நேரிழாய்!
கய வாய் நெய்தல் அலர், கமழ்முகை மண நகை
நயவரு நறவு இதழ், மதர் உண்கண்; வாள் நுதல்;  75

முகை முல்லை வென்று, எழில் முத்து ஏய்க்கும் வெண் பல்சுசுசுசு
நகை சான்ற கனவு அன்று; நனவு அன்றுசுசுசு நவின்றதை:
இடு துனி கை ஆறா என், துயர் கூரச்
சுடும், இறை; ஆற்றிசின், அடி சேர்ந்து! சாற்றுமின்சுசுசுசுசு
மிக ஏற்றுதும் மலர், ஊட்டுதும் அவி,  80

கேட்டுதும் பாணி; எழுதும் கிணைசுசுசுசுசுமுருகன்
தாள் தொழு தண் பரங்குன்று!

தோழி தலைமகளின் கற்புடைமை கூறல்

தெரி இழாய் செல்க! என்றாய்; எல்லா! யாம் பெற்றேம்,
ஒருவர்க்கும் பொய்யா நின் வாய் இல் சூள் வௌவல்;
பருவத்துப் பல் மாண் நீ சேறவின் காண்டைசுசுசுசு  85

எருமை இருத் தோட்டி எள்ளீயும் காளை
செருவம் செயற்கு என்னை முன்னை, தன் சென்னி,
அருள்வயினான், தூங்கு மணி கையால் தாக்கி,
நிரைவளை ஆற்று, இருஞ் சூள்,

 
மேலும் பரிபாடல் »
temple news
பரிபாடல் என்னும் இசைப்பாக்களால் தொகுக்கப்பட்டதால் பரிபாடல் எனப் பெயர் பெற்றது. 70 பாடல்களில் 22 ... மேலும்
 
பரிபாடல் - உரைச்சிறப்புப் பாயிரம் (நிலைமண்டில ஆசிரியப்பா) கண்ணுதற் கடவு ளண்ணலங் குறுமுனிமுனைவேன் ... மேலும்
 
தலைமகளிரது செய்தி வளி பொரு சேண் சிமை வரையகத்தால்  90 தளி பெருகும் தண் சினையபொழில் கொளக் குறையா ... மேலும்
 
பரிபாடல் - 15. திருமால் பாடியவர் :: இளம்பெருவழுதியார்இசையமைத்தவர் :: மருத்துவன் நல்லச்சுதனார்பண் :: ... மேலும்
 
பூ மலி வையைக்கு இயல்பு. பரிபாடல் - 21. செவ்வேள் பாடியவர் :: நல்லச்சுதனார்இசையமைத்தவர் :: கண்ணகனார்பண் :: ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar