பதிவு செய்த நாள்
26
மார்
2013
10:03
சென்னை:பாரிமுனை கந்தகோட்டம் முருகன் கோவிலில், வரும், 29ம் தேதி பாலாலயம் நடைபெற உள்ளது. பாரிமுனை ராசப்பசெட்டி தெருவில் உள்ள, கந்தகோட்டம் என்றழைக்கப்படும் கந்தசுவாமி கோவிலில், 2001ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து, அடுத்த கும்பாபிஷேகத்திற்கான பணிகள், தற்போது துவங்கியுள்ளன. அதன் முதல்கட்டமாக, நாளை மதியம் 12:00 மணி முதல் 12:45 மணிக்குள் விநாயகர், வள்ளி, தேவசேனை, கந்தசுவாமி, மீனாட்சி, சுந்தரேஸ்வரர் உள்ளிட்ட பரிகார மூர்த்திகளுக்கும் கோவில் விமானத்திற்கும் பாலாலயம் நடைபெற உள்ளது. வரும் ஜூலையில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.