பதிவு செய்த நாள்
10
ஏப்
2013
11:04
விக்கிரமசிங்கபுரம்: பாபநாசம் கோயில் சித்திரை விசு திருவிழாவை முன்னிட்டு விக்கிரமசிங்கபுரத்தில் தேரோட்டம் வருகின்ற 13ம் தேதி நடக்கிறது. பாபநாசம் உலகாம்பிகை சமேத பாபவிநாசர் கோயில் சித்திரைவிசு திருவிழாவை முன்னிட்டு கடந்த 5ம் தேதி கோயிலில் கொடியேற்றம் நடந்தது. இதனை தொடர்ந்து தினமும் ஒவ்வொரு சமுதாயம் சார்பில் திருவிழா நடக்கிறது. 8ம் தேதி நடந்த 4ம் திருவிழாவில் சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் வீதி உலா நடந்தது. 9ம் தேதி நடந்த 5ம் திருநாளில் இரவு சுமார் 7 மணிக்கு மண்டகப்படி மண்டபத்தில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை சப்பர வீதி உலா நடந்தது. இன்று (10ம் தேதி) நடக்கும் 6ம் திருநாளில் காலை 7 மணிக்கு சுவாமி அழைப்பு, 10 மணிக்கு மண்டகப்படி மண்டபத்தில் உற்சவருக்கு அபிஷேகமும், மாலை 5 மணிக்கு மூலவருக்கு அபிஷேகம், இரவு சுமார் 10 மணிக்கு சுவாமி அம்பாள் வீதி உலா நடக்கிறது. நாளை (11ம் தேதி) நடக்கும் 8ம் திருநாளில் மாலை 6 மணிக்கு சுவாமி நடராஜர் பெரிய சப்பரத்தில் வீதி உலா, இரவு 8 மணிக்கு திருமுறை இன்னிசை இரவு 9 மணிக்கு ஸ்ரீ சோமாஸ்கந்தர் எழுந்தருளல் நடக்கிறது. 12ம் தேதி நடக்கும் 8ம் திருநாளில் காலை சுமார் 8 மணிக்கு ஸ்ரீ நடராஜர் கேடயத்தில் வெள்ளை சாத்தி புறப்படுதல், காலை 10 மணிக்கு கங்காளநாதர் சிறிய சப்பரத்தில் புறப்படுதல், சுமார் 11 மணிக்கு மண்டகப்படி மண்டபத்தில் சுவாமி - அம்பாளுக்கு அபிஷேகம், ஆராதனை, மாலை சுமுõர் 3 மணிக்கு நடராஜர் பச்சை சாத்தி புறப்படுதல், இரவு 11 மணிக்கு சுவாமி - அம்பாள் வெட்டுங்குதிரை, காமதேனு வாகனங்களில் வீதி உலா நடக்கிறது. 13ம் தேதி நடக்கும் 9ம் திருநாளில் காலை 8 மணிக்கு சுவாமி - அம்பாள் தேருக்கு எழுந்ருளல், காலை 8.45 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் 12 மணிக்கு விமானசாத்தி இரவு 7 மணிக்கு மண்டகப்படி மண்டபத்தில் சுவாமி அம்பாள் அபிஷேகம், 10 மணிக்கு சுவாமி - அம்பாள் புறப்பாடு நடக்கிறது. ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட சமுதாயத்தினர் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.