ஆனூர் கந்தசாமி கோவிலில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஏப் 2013 11:04
திருக்கழுக்குன்றம்: ஆனூர் கந்தசாமி கோவிலில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, சிறப்பு வழிபாடு மற்றும் பக்தர்களுக்கு நாணயங்கள் வழங்கப்பட்டன. திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆனூர் ஊராட்சியில், கந்தசாமி கோவில் அமைந்து உள்ளது. இக்கோவிலில், தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இந்தாண்டிற்கான வழிபாடு, நேற்று முன்தினம் நடைபெற்றது. மாலை 3:30 மணிக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. கோவிலுக்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும், ஆனூர் அறக்கட்டளை சார்பில், 10 ரூபாய் நாணயங்கள் வழங்கப்பட்டன.