திருநெல்வேலி: சித்திரை விஷூவை முன்னிட்டு பாளை., ராஜகோபால சுவாமி கோயிலில் கருட சேவை கோலாகலமாக நடந்தது. சித்திரை விஷூ அன்று பாளை., ராஜகோபாலசுவாமி கோயிலில் உள்ள வேதநாராயண பெருமாளுக்கு எண்ணெய் காப்பு, அலங்கார திருமஞ்சனம் நடந்தது. மதியம் தீர்த்த பிரசாத வினியோகம் நடந்தது. இரவு 7 மணிக்கு ராஜகோபால சுவாமி சிறப்பு அலங்காரத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிகழ்ச்சியில் பாளை., மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோபாலன் கைங்கர்ய சபா உறுப்பினர்கள், பக்தர் பேரவையினர் செய்திருந்தனர்.