பதிவு செய்த நாள்
24
ஏப்
2013
11:04
தூத்துக்குடி: முடிவைத்தானேந்தல் முத்தாரம்மன் அரியநாச்சி அம்பாள் கோயில் கும்பாபிஷேக விழா நாளை நடக்கிறது. முடிவைத்தானேந்தல் முத்தாரம்மன் அரியநாச்சி அம்பாள் கோயில் கும்பாபிஷேக விழா நேற்று காலை விநாயகர் வழிபாட்டுடன் துவங்கியது. காலையில் கணபதி ஹோமம், பிரம்சாரி பூஜைகள் நடந்தது. தொடர்ந்து நவக்கிரஹ ஹோமம் நடந்தது. விழாவில் இன்று காலை 9 மணிக்கு 2ம் கால யாகசாலை பூஜையும், திரவிய ஹோமங்களும் நடக்கிறது. இன்று மாலை 6 மணிக்கு 3ம் கால யாகசா லை பூஜைகள் துவங்குகிறது. தொடர்ந்து வேதிகா அர்ச்சனை, பூர்ணாஹூதி, தீபாராதனை நடக்கிறது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான நாளை காலை 6 மணிக்கு 4ம் கால யாக சாலை பூஜைகள் துவங்குகிறத. திரவியஹோமங்கள், பிம்பசுத்தி, யாத்ரா தானம், கடம்புறப்பாடு நிகழ்ச்சிகள் நடக்கிறது. தொடர்ந்து காலை 8 மணிக்கு விமான அபிஷேகமும், தொடர்ந்து காலை 8.30 மணிக்கு மூலாலய அபிஷேகம், ஸ்ரீமுத்தாரம்மன் அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து அரியநாச்சி அம்மனுக்கு 4ம் கால யாக பூஜை நடக்கிறது .திரவிய ஹோமங்கள், பிம்ப சுத்தி நடக்கிறது.காலை 10.45 மணிக்கு விமான அபிஷேகமும், 11.30 மணிக்கு மூலாலய அபிஷேகம், அரியநாச்சி அம்மனுக்கு அபிஷேகமும், தொடர்ந்து 12 மணிக்கு மஹா அபிஷேகமும் நடக்கிறது. மதியம் 1 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியார் செய்துவருகின்றனர்.