Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அணுவை கண்டுபிடித்ததே நம் புலவர்கள் ... செவ்வாயின் கதை தெரியுமா?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஆண்டவன் ஒருவன் இருக்கிறான்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மே
2013
04:05

*தன்னம்பிக்கையும், அடக்கமும் ஒரு மனிதனிடம் இருக்குமானால், அவனது வாழ்வு தித்திக்கும். அவனை யாராலும் வெல்ல முடியாது.
*நரகத்திற்குப் பயந்தோ, சொர்க்கத்தை விரும்பியோ தர்மச் செயல்களைச் செய்வது கூடாது. எந்த பலனும் எதிர்பாராமல் செய்ய வேண்டும்.
*அன்பு ஒருபோதும் எதையும் எதிர்பார்க்காது. பிறருக்கு கொடுப்பதில் தான் மகிழ்ச்சி கொள்ளும்.
*படைபலத்தால் கிடைக்கும் வெற்றியை விட, மனதில் இருக்கும் ஆசை, கோபம் ஆகிய இரண்டு உணர்ச்சிகளையும் வெல்வது மேலானது.
*அடக்கம் இல்லாதவன் எவ்வளவு படித்திருந்தாலும் தற்குறிக்குச் சமம். தலைமை ஏற்கும் தகுதி பெற விரும்புபவர்கள் முதலில் கற்க வேண்டிய பண்பு அடக்கம்.
*நம்முடன் எப்போதும் கடவுள் இருக்கும்போது, வாழ்வில் ரகசியம் என்பதே இருக்க முடியாது. நம் எண்ணத்தைக் கடவுள் அறிவார் என்ற உண்மையை உணருங்கள்.
*ஆயிரம் பெயர் சொல்லி அழைத்தாலும் உலகில் கடவுள் ஒருவரே இருக்கிறார். அவர் அன்பான மனங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்.
*தூய பக்தியுணர்வு மனதில் இருக்குமானால் துன்பம் கூட பேரின்பமாகத் தோன்றும்.
*உண்ணாநோன்பு, உடலோடு உள்ளத்தையும் தூய்மைப்படுத்தும்.
*அறிவை விட மேலானது உண்மை. உண்மையை நமது மதமாகப் போற்றுவோம். சிறு சிறு விஷயத்தில் கூட உண்மையாக இருப்பதே தூய வாழ்வின் அடிப்படை ரகசியம்.
*மனித எண்ணத்தை விட சக்தி படைத்தது உலகில் வேறில்லை.
*நாணயமாகச் சம்பாதித்தால் எந்த வேலையும் கவுரவக் குறைவானது அல்ல.
*உழைப்பவர் கையில் தான் இந்த உலகம் இருக்கிறது. பிறர் உழைப்பைச் சுரண்டிப் பிழைப்பதால் உண்டாகும் முன்னேற்றம் நிலைத்து நிற்பதில்லை.
*உழைக்காத மனிதனுக்கு உண்பதற்குக் கூட உரிமை இல்லை.
*ஆரோக்கியத்தை விரும்பும் மனிதன் உழைப்பதற்குத் தயங்க மாட்டான்.
*உழைக்காமல் உணவு உண்ணும் மனிதர்கள் திருடர்களுக்குச் சமமானவர்கள்.
*அறிவை விட ஒழுக்கம் உயர்வானது. ஒழுக்கமின்மை பல தீமைக்கு வழிவகுக்கும்.
*ஒழுக்கத்தை வெறும் படிப்பறிவால் பெற்று விட முடியாது.
*கைமாறு கருதாமல் பிறருக்கு நன்மை செய்யும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்.
*ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் ஒற்றுமைக்கு ஊறு விளைவதில்லை.
*நாம் செய்யும் ஒவ்வொரு நன்மை, தீமைக்கும் கடவுள் சரியான கணக்கு வைத்திருக்கிறார். அவருக்கு இணையான கணக்குப் பிள்ளை வேறு யாருமில்லை.
*எதை மனிதன் விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான் என்பது கடவுள் வகுத்த விதி. இதிலிருந்து யாரும் தப்ப முடியாது.
*குழந்தைப் பருவத்தில் உருவாகும் கருத்துக்கள், ஆழ்ந்த வேர் போல மனதில் பதிந்து விடுகின்றன.
*அநியாயத்தை எதிர்த்து நிற்பது நம் ஒவ்வொருவரின் கடமை.
*மனதிற்கு சாந்தி அளிப்பதற்காகவே இசை, நடனம் முதலிய கலைகள் உருவாக்கப்பட்டன.
-காந்திஜி

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar