புத்தாண்டு அன்று கோயில்கள், மடங்கள், ஊர் பொது இடங்களில் பஞ்சாங்கம் வாசிப்பர். திதி, வாரம் (கிழமை), நட்சத்திரம், யோகம், கரணம் என்னும் பஞ்ச (ஐந்து) அங்கங்களைக் கொண்டதால், இதற்கு பஞ்சாங்கம் என்று பெயர். திதியைப் படிப்பதால் லட்சுமி கடாட்சம் ஏற்படும். கிழமை பற்றி அறிவதால் நீண்ட ஆயுள் கிடைக்கும். நட்சத்திரம் பற்றி படிப்பதால் முன்வினைப் பாவம் நீங்கும். யோகத்தை வாசிப்பதால் நோயற்ற வாழ்வும், கரணத்தை அறிவதால் செயல்களில் வெற்றியும் உண்டாகும்.