திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவிலில் சூரபத்மனுக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24அக் 2025 03:10
திருப்பூர்; விஸ்வேஸ்வரர் கோவில் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் விழாவிற்கு புதிதாக செய்யப்பட்டுள்ள சூரபத்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது.
திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவிலில், ஷண்முக சுப்பிரமணியர் சன்னதியில் சிறப்பு பூஜைகளுடன் கந்தசஷ்டி விழா விமரிசையாக நடத்தப்படுகிறது. கடந்த 22ம் தேதி, ஸ்ரீவள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் சிறப்பு அபிஷேகம் மற்றும் காப்புக்கட்டும் நிகழ்ச்சியுடன், கந்தசஷ்டி விரதம் துவங்கியது. கந்த சஷ்டி விரதம் இருக்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டி விரதம் துவங்கினர். தினமும் காலை அபிஷேகம் மற்றும் அலங்காரபூஜை நடைபெறுகிறது. வரும், 27ம் தேதி காலை, 108 பால்குடம் ஊர்வலமாக எடுத்து வந்து மகா அபிஷேகம்; தொடர்ந்து சூரசம்ஹாரமும் நடைபெற உள்ளது. இதற்காக புதிதாக செய்யப்பட்டுள்ள சூரபத்மனுக்கு இன்று சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். 28ம் தேதி காலை திருக்கல்யாண உற்சவமும் நடைபெற உள்ளது.