கைகேயியிடம் இல்லாததையும், பொல்லாததையும் சொல்லி மந்தரை மனதை மாற்றி விட்டாள். இதனால், ராமனுக்கு நடக்கவிருந்த பட்டாபிஷேகத்தை நிறுத்தியதோடு அவனை காட்டுக்கும் அனுப்பினாள். காரணம் கைகேயிக்கு இருந்தது குமதி. குமதி என்றால் கோணல் புத்தி. ஆனால், அவளது மகன் பரதனுக்கு இதில் உடன்பாடில்லை. ஏனென்றால் அவனுக்கு இருந்தது சுமதி. சுமதி என்றால் நல்ல புத்தி. வால்மீகி பரதனை, தெளிந்த சிந்தையும், நல்ல புத்தியும் கொண்டவன் என்று குறிப்பிடுகிறார். நல்ல புத்தியான சுமதி வேண்டுமென்றால், தினமும் விஷ்ணு சகஸ்ரநாமம் படிக்க வேண்டும். எனக்கு சுமதி வேணும் என கடவுளிடம் பிரார்த்திப்பீர்களா!