கிணத்துக்கடவு; கிணத்துக்கடவில் உள்ள வீரமாச்சி அம்மன் கோவிலில் திருவிழா நடக்கிறது. கிணத்துக்கடவு, தேரோடும் வீதி, வீரமாச்சியம்மன் கணபதி கருப்பராயன் கன்னிமார் கோவிலில் திருவிழா நிகழ்ச்சிகள் கடந்த, 9ம் தேதியன்று, தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. 10ம் தேதி, கணபதி ஹோமம், பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தது. இதைத்தொடர்ந்து வள்ளி கும்மி நிகழ்ச்சி நடந்தது. 11ம் தேதி, சக்தி கரகம் மற்றும் தீர்த்தம் ஆற்றில் இருந்து அழைத்துவரும் நிகழ்வு நடந்தது. 12ம் தேதி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது. இதைத்தொடர்ந்து பக்தர்கள் மாவிளக்கு எடுத்து வந்து சுவாமி தரிசனம் செய்தனர். இன்று 13ம் தேதி, காலை 10:00 மணிக்கு, மஞ்சள் நீராடல் நடக்கிறது. 15ம் தேதி, மாலை 5:00 மணிக்கு மேல், சுவாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடக்கிறது.