சிவகா:சிவகாசி விஸ்வநாதர் கோயிலில், மழை வேண்டி சிறப்பு பூஜை நடந்தது. சிறப்பு யாகம் வளர்த்து, மகா வருண ஜெபம், யாகம், சிவபெருமானுக்கு ருத்ராபிஷேகம், நந்தி பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. சுப்பிரமணிய பட்டர் தலைமையில், தங்கராஜ் பட்டர்,கணேஷ்பட்டர், மடப்பள்ளி அய்யர் ராமர் ஆகியோர், வேத மந்திரங்களை முழங்க, ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தக்கார் கவிதா பிரியதர்ஷினி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்