வேல்ஸ் இளவரசர் ஏழாவது எட்வர்டு இந்தியா விஜயம் செய்தார். அப்போது, இங்கிலாந்தின் போர்க்கப்பலான சிராபிஸ் கோல்கட்டாவிற்கு வந்திருந்தது. அதைக் காண விரும்பினார் விவேகானந்தர். அப்போது அவரது வயது 12. நிஜப்பெயர் நரேன். அவர் நண்பர்களுடன் புறப்பட்டார். அனுமதிச்சீட்டு பெற முயன்றபோது காவலாளி, சிறுவர்களுக்கு அனுமதி இல்லை என வெளியேறினார். ஆனால், நரேனுக்கு கப்பலைப் பார்க்க வேண்டும் என்று தீராத ஆசை. அலுவலகத்தின் பின்புறம் பணியாளர்கள் செல்லும் வழி இருப்பதைக் கண்டார். துணிச்சலுடன் அந்த வழியில் உள்ளே நுழைந்தார். அதிகாரியிடம் அனுமதி சீட்டைப் பெற்றுக் கொண்டு வெளியே வந்தார். அதைக் கண்ட காவலாளி ஒருகணம் திகைத்தாலும், அவரது துணிச்சலைக் கண்டு, சபாஷ்டா! கண்ணா, என்று பாராட்டினார்.