மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆடி முளைக்கொட்டு திருவிழா வாஸ்து சாந்தியுடன் இன்று (ஜூலை 10) துவங்கி ஜூலை 20 வரை நடக்கிறது. நாளை (ஜூலை 11) காலை 10 மணிக்கு மேல் 11 மணிக்குள் கொடியேற்றம். ஜூலை 12 முதல் ஜூலை 18 வரை காலை 9 மணிக்கு ஆடி வீதிகளில் தங்கச்சப்பரத்தில் உலா. ஜூலை 19ல் காலை 9.35 மணிக்கு சிம்ம வாகனத்தில் சித்திரை வீதிகளில் சட்டத்தேரில் உலா. ஜூலை 20ல் பொற்றாமரைக் குளக்கரையில் தீர்த்தத்துடன் விழா நிறைவடைகிறது.