பதிவு செய்த நாள்
19
ஜூலை
2013
10:07
ஆழ்வார்குறிச்சி: ஆழ்வார்குறிச்சி வரம்தரும் விநாயகர்கோயில், பெருமாள் கோயில்களில் வருஷாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. ஆழ்வார்குறிச்சி தெப்பக்குளம் வரம்தரும் விநாயகர் கோயிலில் நடந்த வருஷாபிஷேக விழாவில் காலையில் கும்ப ஜெபம், வேதபாராயணம், சிறப்பு அபிஷேகம் ஆகிய வைபவங்களை அப்புநாதபட்டர், ஆண்டபெருமாள்பிள்ளை ஆகியோர் நடத்தினர். பின்னர் விநாயகர், நவக்கிரகம், பாலதுர்க்கை மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் மற்றும் விமான அபிஷேகமும், தொடர்ந்து சிறப்பு பூஜையும் நடந்தது. இரவு விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தலும் பூஜையும் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
* ஆழ்வார்குறிச்சி வேங்கடேச பெருமாள் கோயிலில் வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு கருடசேவை நடந்தது. ஆழ்வார்குறிச்சி கீழகிராமத்தில் வேங்கடபெருமாள் கோயில் உள்ளது. இங்கு பெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவி, கருடன், நரசிம்மர் மற்றும் பரிவார மூர்த்திகள் எழுந்தருளியுள்ளனர். இங்கு நடந்த வருஷாபிஷேக விழாவில் கும்ப ஜெபம், வேதபாராயணம், சிறப்பு பூஜைகளை சம்பத்குமார், ரவி ஐயங்கார் ஆகியோர் நடத்தினர். பின்னர் ஹயக்கிரீவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இரவு சகஸ்ர நாம அர்ச்சனையும், விசேஷ பூஜையும், தொடர்ந்து பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளலும் நடந்தது.