திருக்கழுக்குன்றம்:பொன்பதர்கூடம், சதுர்புஜ கோதண்டராமர் திருக்கோவிலில், திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடந்தது. பொன்விளைந்தகளத்தூர் அடுத்த பொன்பதர்கூடத்தில், பிரசித்தி பெற்ற சதுர்புஜ கோதண்டராமர் திருக்கோவில் உள்ளது. இங்கு, திருக்கல்யாண உற்சவம், நேற்று முன்தினம் காலை, திருமஞ்சன நிகழ்ச்சியுடன் துவங்கியது.மூலவர் பட்டாபி ராமருக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்து, வழிபாடு நடைபெற்றது. நேற்று, 11:30 மணிக்கு, சதுர்புஜ ராமருக்கும், சீதா தேவிக்கும், திருக்கல்யாண மஹோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு இறையருள் பெற்றனர்.