பதிவு செய்த நாள்
28
ஆக
2013
11:08
பவானி தளவாய்ப்பேட்டையில், எழில்அரசி மாரியம்மன் கோவிலின், 60ம் ஆண்டு அஷ்டதுர்க்கா லஷ்மி ஹோமம், 31ம் தேதி துவங்குகிறது. அன்று மதியம் ஒரு மணிக்கு, பவானி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதலுடன் நிகழ்ச்சிகள் துவங்குகிறது. மாலை, 6 மணிக்கு கணபதி வழிபாடு, புண்ணியவாசனை, வேதபாராயணம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடக்கிறது. செப்டம்பர், 1ம் தேதி காலை, 7 மணிக்கு கணபதி வழிபாடு, பஞ்சகவ்யம், அஷ்டதுர்க்கா லஷ்மி ஹோமம் நடக்கிறது. மதியம், 12 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. மாலை, 5 மணிக்கு திருவீதி உலா நடக்கிறது. ஈரோடு மாநகராட்சி வலம்புரி விநாயகர் கோவில் ரவிசிவம், எஸ்.பி.பி., காலனி கணேசசிவம் ஆகியோர் பூஜைகளை செய்கின்றனர்.