குதிரை முகத்துடன் காட்சியளிக்கும்திருமாலை, ஹயக்ரீவர் என்பர். தமிழில் இவரை பரிமுகன் என்று குறிப்பிடுவர். ஹயம், பரி என்ற சொற்களுக்கு குதிரை என்று பொருள். ஞானமயமாக விளங்கும் இவரே சகல வித்தைகளுக்கும் (கல்வி)ஆதாரமாகத் திகழ்கிறார். காஞ்சிபுரம் மாவட்டம் செட்டிபுண்ணியம் தேவநாத பெருமாள் கோயிலில் செப்.16ல் ஹயக்ரீவ ஜெயந்தி நடக்கிறது. இங்குள்ள யோக ஹயக்ரீவருக்கு அன்று காலை 5க்கு விஸ்வரூப தரிசனமும், 6.30க்கு திருவாராதனமும் நடக்கிறது. காலை 7-மதியம்12.30 வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம். மதியம் 2-3.30 வரை சிறப்பு திருமஞ்சனம், மாலை 4- இரவு8 வரை பக்தர்கள் தரிசனம், இரவு 8 க்கு திருவாராதனம் நடக்கிறது. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க இங்குள்ள யோகஹயக்ரீவரை ஹயக்ரீவ ஜெயந்தி நாளில் வழிபடலாம்.