Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நவராத்திரி கொண்டாட்டம் மகாபெரியவர் ... மனதிலே குழப்பமா?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
சத்தியமா நான் சொல்லுவதெல்லாம் தத்துவம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 செப்
2013
03:09

*கீதையை வழிபடுவது கிளிப்பிள்ளை போல தினமும் படிப்பது அன்று. அதன் உபதேசத்தைக் கடைபிடித்து வாழ்வது மட்டுமே.
*மறைந்த எந்த மனிதரையும் வணங்காமல் சத்தியத்தின் வடிவமான கடவுளை மட்டும் வணங்குவதே சரியான நெறிமுறை.
*பிரார்த்தனை என்பது வெறும் ஜெபமாலையை உருட்டுவது அல்ல. இதயப்பூர்வமானதாக இருப்பதே உண்மையான பிரார்த்தனை.
*பாவத்தை வெறுக்க வேண்டுமே ஒழிய பாவியை வெறுப்பது கூடாது. உலகில் வெறுப்பு என்னும் நஞ்சு பரவுவதற்கு வெறுப்பே காரணம்.
*நற்செயல்களைப் புகழ்வதோடு, அதை செய்த நல்லவர்களை மதிப்போம். தீய செயல்களை இகழ்வோம். ஆனால், அதைச் செய்தவர்கள் மீது இரக்கம் காட்டுவோம்.
*கடவுள் வழங்கிய ஆற்றலைப் பணம் தேட மட்டும் செலவு செய்யாதீர்கள். அதைக் கொண்டு மக்களுக்குத் தொண்டு செய்யுங்கள்.
*கடவுளை நம்பி நின்றால், பிறரால் எதிர்க்க முடியாத தைரியம் மனதில் பிறக்கும்.
*நியாயவழியில் செல்பவனுக்கு உதவி கிடைக்கும் என்பது நியதி. திக்கவற்றவருக்குத் தெய்வமே துணை என்பார்கள்.
*உடம்பில் இருக்கும் பலத்தைக் காட்டிலும், மனதில் இருக்கும் பயத்தைப் போக்குவது தான் மிகப் பெரிய பலம்.
*கடவுள் நம்மிடம் எதையும் எதிர்பார்க்கவில்லை. அப்படி ஏதாவது பெற வேண்டுமானால் அவர் அன்பு நிறைந்த இதயத்தை மட்டுமே நம்மிடம் எதிர்பார்க்கிறார்.
*பிரார்த்தனை காலையின் திறவுகோலாகவும், மாலையின் தாழ்ப்பாளாகவும் இருக்கிறது. அதனால், ஒவ்வொருநாளும், பிரார்த்தனையில் தொடங்கி பிரார்த்தனையில் முடிய வேண்டும்.
*நல்லெண்ணத்துடன் தொடங்கிய முயற்சி வீண்போவதில்லை. மனிதனின் பங்களிப்பு முயற்சியில் இருக்கிறது. அதன் பலனோ கடவுளின் கையில் உள்ளது.
*உணவு இல்லாமல் கூட மனிதன் உயிர் வாழ முடியும். ஆனால், பிரார்த்தனை இல்லாமல் அரை நிமிடம் கூட வாழ முடியாது.
*மனிதனிடம் உள்ள தீய குணங்களைப் போக்குவதற்கு பிரார்த்தனையை விடச் சிறந்த மார்க்கம் வேறில்லை.
*சிறு சிறு செயல்களில் கூட உண்மையாக நடப்பதுவே தூயவாழ்வு பெறுவதற்கான ரகசியம்.
*எண்ணத்தை விட ஆற்றல் மிக்க பொருள் உலகில்கிடையாது. கடவுள்ஒருவரால் மட்டுமே எண்ணத்தை அறிய முடியும். எப்போதும் மனதைத் தூய்மையாக வைத்துக் கொள்வது அவசியம்.
*அளவாக உண்ண வேண்டுமேயன்றி சுவைக்காக உண்பது கூடாது. ஆரோக்கியத்திற்காக மட்டும் உண்பது அவசியம்.
*உழைப்பு இல்லாமல் சாப்பிடுவதற்கு யாருக்கும் உரிமையில்லை. உழைப்பவர் கைகளில் தான் உலகம் இருக்கிறது. பிறர் உழைப்பில் ஒருபோதும் வாழ்வது கூடாது.
*நாணயமாகச் சம்பாதிக்கும் எந்த வேலையும்கவுரவக் குறைவானது அல்ல.
*கடவுளுக்கு எத்தனையோ பெயர்கள் இருக்கின்றன. அதில், சத்தியம் என்பது தான் மிகச் சிறந்த பெயர்.
-மகாத்மா காந்தி

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar