கண்ணனுக்காக பக்த மீரா கட்டிய கோயில் ஒன்று ராஜஸ்தான் மாநிலம் சித்தூர்கர் எனும் நகரில் உள்ளது. கோயில் கட்டி முடித்த பின்னும் கிருஷ்ண விக்ரகத்தை பிரிய மனமில்லாத மீராபாய், அதை கோயிலில் பிரதிஷ்டை செய்யாமல் தன்னிடமே வைத்துக் கொண்டிருந்தாராம். முடிவில் கிருஷ்ண விக்ரகத்தைத் தழுவிய படியே இறைபாதம் அடைந்தார். பிறகு உதயபுரி மகாராஜாவின் அரண்மனைக்குக் கொண்டுவரப்பட்டு கிருஷ்ண விக்ரகம் அங்கேயே சிலகாலம் கொலு வீற்றிருந்து. இதை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சோதித்து இது மீரா காலத்து விக்ரகம் என்றனர். பிறகு இந்த விக்ரகம் மீரா கட்டிய கோயிலில் 1968 ம் ஆண்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.