சென்னை, பூந்தமல்லியை அடுத்த திருமழிசையில் உள்ளது வீற்றிருந்த பெருமாள் கோயில். அஷ்ட ஐஸ்வர்யங்களையும் அருளும் அஷ்ட லட்சுமிகளும் இந்த பெருமாளிடம் ஐக்கியமாகி யிருக்கிறார்கள். பெருமாளின் மார்பில் இருவர், சிரசில் பொருத்தப்பட்டிருக்கும் கிரீடத்தில் நான்கு லட்சுமியர், பெருமாளின் இருபுறமும் பக்கத்திற்கு ஒருவர் என்று அஷ்டலட்சுமியருடன் அருள்கிறார். சனிக்கிழமைகளில் இந்த பெருமாளை துளசி மாலை சாத்தி வழிபட, குடும்பத்தில் செல்வம் பெருகும் என்கிறார்கள்.