ஞானி ஒருவர் எத்தகைய சூழலிலும் மகிழ்வுடன் இருப்பதைப் பார்த்த ஒருவன், ஐயா தங்களால் மட்டும் எப்படி எப்போதும் சந்தோஷமாக இருக்க முடிகிறது? என்று கேட்டான். தினமும் காலையில் எழுந்ததும், எனக்கு நானே இரண்டு கேள்விகளைக் கேட்டுக் கொள்வேன். ஒன்று, இன்று நீ மகிழ்வுடன் இருக்கப் போகிறாயா? அடுத்தது, சிடுமூஞ்சியாக கவலையுடன் இருக்கப் போகிறாயா? எப்போதும் முதலாவதையே தேர்வு செய்து அதன்படியே நடந்து கொள்வேன். அவ்வளவு தான்....! அமைதியாகச் சொன்னார், ஞானி.