பெரும்பாலான அம்மன் ஆலயங்களில் தீமிதி திருவிழா நடப்பதுண்டு. அந்தத் தீக்குழியினை பூக்குழி என்றும் அழைப்பர். அதன் காரணம். பக்தர்கள் தீயில் இறக்கும் முன் கோயிலின் பூசாரி அன்னைக்கு சமர்ப்பிக்கப்பட்ட பூக்களில் சிறிதளவு எடுத்து தீக்குழியில் வீசுவார். அப்படிப் போடப்படும் மலர் நீண்ட நேரம் வாடாது என்பதும், அம்மன் அருளால் பக்தர்களின் பாதங்களைச் சுடாமல் அக்னி பூப்போல இருக்கும் என்பதும் நம்பிக்கை. சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பாஞ்சாலி அம்மன் கோயிலில் பக்தர்கள் பூக்குழியில் இறங்கும் முன், அதிலுள்ள தீக்கனலில் கொஞ்சத்தை எடுத்து அம்மன் மடியில் கட்டுகிறார்கள். எல்லோரும் தீமிதித்த பின்னரே அதனை அவிழ்க்கிறார்கள். அம்மன் புடவையில் இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதை அதிசயமாய்ச் சொல்கிறார்கள்.