பதிவு செய்த நாள்
18
அக்
2013
11:10
பெண்ணாடம்: பெண்ணாடம் அடுத்த மாளிகைக் கோட்டம் விநாயகர், காமதகன லிங்கேஸ்வரர், முருகன் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. அதனையொட்டி, நேற்று முன்தினம் காலை 7:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி இரவு 7:30 மணிக்கு முதற்கால பூஜை துவங்கியது. நேற்று காலை 4:30 மணியளவில் இரண்டாம் கால பூஜை, 5:00 மணிக்கு பிரம்ம முகூர்த்தம், நாடி சந்தானம், 7:30 மணிக்கு இரண்டாம் காலம் பூஜை, 8:20 மணிக்கு கடம் புறப்பாடு, 8:40 மணியளவில் விநாயகர், காமதகன லிங்கேஸ்வரர், முருகன் சுவாமிகளுக்கும், கோபுர கலசத்திலும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.காலை 9:00 மணிக்கு மூலஸ்தான மூர்த்திகளுக்கு கலசாபிஷேகம், 10:30 மணியளவில் மகா அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.