புதுச்சேரி: சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா வரும் நவம்பர் 2-ம் தேதி முதல் நடைபெறுகிறது. இதன் ஒருபகுதியாக 3-ஆம் தேதி இரவு 7 மணிக்கு கொடியேற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு சுவாமி வீதி உலா தொடங்குகிறது. நாள்தோறும் காலை வேளைகளில் முருகப்பெருமானுக்கு அபிஶேகம், ஆராதனை நடைபெறுகிறது. 4-ஆம் தேதி இரவு சூரியபிரபையிலும், 5-ஆம் தேதி இரவு ரிசப வாகனத்திலும், 6-ஆம் தேதி பிற்பகல் ஆனைமுகசூரன் சம்ஹாரம், இரவு குதிரை வாகனத்திலும் சுவாமி வீதி உலா நடக்கிறது.