பரவை: பரவை முத்துநாயகியம்மன் கோயிலில், புரட்டாசி பொங்கல் திருவிழாவில், அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. நேற்று காலை அம்மனுக்கு பல்வேறு அபிஷேக, தீபாராதனைகள் நடந்தன. நூற்றுக்கு மேற்பட்ட பக்தர்கள் அங்கபிரதஷ்னம் செய்து, பால்குடம், அக்கினிச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலையில், கோயில் நாட்டாண்மை மனோகரன் தீபம் ஏற்ற, புஷ்பசப்பரத்தில் அம்மன் சிங்கவாகனத்தில் எழுந்தருளினார். பக்தர்கள் பூஜை செய்து, அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. ஏற்பாடுகளை, பரவை கிராம கமிட்டியினர் செய்திருந்தனர்.