திருக்குறுங்குடி: திருக்குறுங்குடி கோயிலில் கார்த்திகை தீப விழா நடந்தது. 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றாக திகழும் பிரசித்தி பெற்ற திருக்குறுங்குடி அழகியநம்பி கோயிலில் திருகார்த்திகை தீப விழா நடந்தது. இதனை முன்னிட்டு நம்பிசு வாமிகளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. மாலையில் நம்பி சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சன்னதி தெருவில் இருபுறங்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. விழாவில் திருக்குறுங்குடி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.