தஞ்சாவூர்: கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு தஞ்சை முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தஞ்சை பூக்காரத்தெருவில் உள்ள சுப்பிரமணியசாமி கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். தஞ்சை பெரியகோவிலில் உள்ள முருகன் சன்னதியிலும் சிறப்புவழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.