சாக்கிய நாயனார், புத்தமதத்தில் இருந்து, சைவ மதத்தைத் தழுவினார். சிவபெருமானை வணங்கினால், புத்தமதத்தினர் கோபித்து தன்னை துன்புறுத்தக் கூடும் என்பதால், சமயோசிதமாக ஒரு செயலைச் செய்தார். சிவபெருமான் மீது கோபம் கொண்டவர் போல நடித்து, சிவலிங்கத்தின் மீது கல்வீசி வழிபாடு செய்தார். அந்தக் கற்களை தன்னை அர்ச்சிக்கும் பூக்களாக ஏற்றுக் கொண்டார். பக்தன் அளித்த பொருளை இறைவன் பார்க்கவில்லை. அந்தப் பொருளுக்குள் புதைந்து கிடந்த அன்பையே மெச்சினார்.