திருவள்ளூர் லட்சுமிநரசிம்மர் கோயிலில் அன்னகூட்ட மகோத்சவ விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27நவ 2013 12:11
திருவள்ளூர்: லட்சுமி நரசிம்மர் கோயிலில் வரும் டிசம்பர் 1-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்ன கூட்ட மகோத்சவ விழா நடைபெறுகிறது. இந்தாண்டு அன்ன கூட்ட மகோத்சவ விழா கார்த்திகை மாதம் 15-ஆம் நாளான டிசம்பர் 1-ஆம் தேதி நடைபெறுகிறது. இவ்விழாவில் 250 கிலோ அரிசியில் சாதம் வடித்து, பல வகை காய்கறிகள் கொண்டு சமையல் செய்து, பல்வேறு இனிப்பு வகைகளோடு மூலவருக்கு படையிலிட்டு பூஜிக்கப்படும்.