தமிழகத்தில் பல கோயில்கள் இருந்தாலும், ரிஷிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மூர்த்திகளைக் கொண்ட கோயில்கள் மிகவும் தி வாய்ந்தவையாக உள்ளன. அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது குற்றாலம் குற்றாலநாதர் கோயில். நாகப்பட்டினம் அருகிலுள்ள சிக்கலில் வசிஷ்டரும், திருச்சி அருகிலுள்ள திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் (அகிலாண்டேஸ்வரி) கோயிலில் ஜம்பு மகரிஷியும், திருக்களர் என்ற ஊரிலுள்ள சிவாலயத்தில் துர்வாச முனிவரும் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்துள்ளனர். இவை ஆர்ஷ பிரதிஷ்டை கோயில்களாகும். ஆர்ஷம் என்றால் ரிஷிகளால் உருவாக்கப்பட்டவை எனப்பொருள்.