பந்தலூர்: பந்தலூர் பிரான்சிஸ் சவேரியார் ஆலய திருவிழா நடந்தது. கடந்த 1ம்தேதி காலை 10:00 மணிக்கு அருட்தந்தை ஆரோக்கியசாமி தலைமையில் திருப்பலி, கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து, 8ம்தேதி காலை 9:30 மணிக்கு ஆயருக்கு வரவேற்பும், புதிய கெபி திறப்பு விழாவும் ஆயர் அமல்ராஜ் தலைமையில் நடந்தது. மேலும், குழந்தைகளுக்கு புதுநன்மை உறுதிபூசுதல் பகல் 12:00 மணிக்கு அன்பின்விருந்தும், மாலை 5:30 மணிக்கு தேர்பவனி நடந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்படுகளை பங்குதந்தை மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர்.