திருப்பாச்சேத்தி:திருப்பாச்சேத்தி அருகே கல்லூரணியில், சமத்துவ பொங்கல் விழா மற்றும் திருவிளக்கு பூஜை நடந்தது.உலக நன்மைக்காகவும், மழைவேண்டியும் பெண்கள் கூட்டு பிரார்த்தனை செய்தனர். சுந்தரராஜ பெருமாள் கோயில் விழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. சமத்துவ பொங்கல் மற்றும் திருவிளக்கு பூஜையில் 200க்கும் மேற்பட்ட பெண்கள், குத்துவிளக்கு பூஜையில் பங்கேற்று, கூட்டு பிரார்த்தனை செய்தனர். பூஜைகளை, ஸ்ரீதர் பட்டர் செய்திருந்தார். கல்லூரணி ஊராட்சி தலைவர் மீனாட்சி, முன்னாள் அரசு வக்கீல் மோகன்குமார் பங்கேற்றனர்.