நத்தம்: மீனாட்சிபுரம் அரண்மனை சந்தனகருப்பு சாமி கோவிலில் தைத்திருவிழா நடந்தது. விழாவின் முதல் நாள் பிடிமண் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. 2–ம் நாள் கொடியேற்றம், தோரண மரம் ஊன்றுதல் மேள தாளங்கள் முழங்க நடந்தது. தொடர்ந்து 3–ம் நாள் அதிர்வேட்டுகள் முழங்க சந்தனகருப்பு சாமி சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி, திருகண் திறக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.