Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலையில் நந்தி பகவான், ... அய்யன் கோவிலில் குவிந்த பக்தர்கள்; நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் அய்யன் கோவிலில் குவிந்த பக்தர்கள்; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இன்று சிவராத்திரி, காணும் பொங்கல்; உறவினர் ஒற்றுமையை பலப்படுத்தும் உன்னத நாள்!
எழுத்தின் அளவு:
இன்று சிவராத்திரி, காணும் பொங்கல்; உறவினர் ஒற்றுமையை பலப்படுத்தும் உன்னத நாள்!

பதிவு செய்த நாள்

17 ஜன
2026
07:01

பொங்கல் பண்டிகையானது மொத்தம் நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. பொங்கலிற்கு முதல்நாள் போகி பண்டிகை, அடுத்து தைப்பொங்கல், பின்பு மாட்டு பொங்கல், நான்காம் நாள் கொண்டாடப்படுவது கன்னி பொங்கல் என்று சொல்லக்கூடிய காணும் பொங்கல் ஆகும்.


சாதி, சமய வேறுபாடின்றி தமிழர்கள் அனைவராலும் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும். இது பெண்களுக்கு முக்கியமான பண்டிகை ஆகும். இப்பண்டிகையில் உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல் மற்றும் பெரியோரின் ஆசி பெறுதல் என்பன அடங்கும். அதாவது வீட்டில் இருக்கும் வயதுக்கு மூத்தவர்களின் கால்களில் விழுந்து ஆசி பெற்று கொள்வார்கள். தங்கள் அன்பையும் உணவு பண்டங்களையும் பகிர்ந்து கொள்வார்கள். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பட்டிமன்றம், உறி அடித்தல், வழுக்கு மரம் ஏறுதல் போன்ற வீர சாகசப் போட்டிகள் உட்படப் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஆயிரக்கணக்கான பேரை ஒரே இடத்தில் காண்பதற்காக கொண்டாடப்படுவது எனலாம்.


பொங்கல் பானை வைக்கும் போது அதில் புது மஞ்சள் கொத்தினைக் கட்டி அதனை எடுத்து முதிய தீர்க்க சுமங்கலிகள் ஐவர் கையில் கொடுத்து ஆசி பெற்று அதனை கல்லில் இழைத்து பாதத்தில் முகத்தில் பூசிக்கொள்வார்கள். காணும் பொங்கல் என்றால் குடும்பத்தினருடன் வீட்டில் சமைத்த உணவை எடுக்துக்கொண்டு பிடித்த இடத்திற்கு செல்வது என்று நாம் நினைத்து கொண்டு இருக்கிறோம். ஆனால் உண்மையில் பொங்கல் அன்று செய்த சாதத்தை உடன் பிறந்தவர்களின் நன்மைக்காக காக்க, குருவிக்கு அன்னமிட வேண்டும் என்பதே கதை. ஆற்றங்கரையிலோ அல்லது வீட்டு மொட்டை மாடியிலோ மஞ்சள் அல்லது வாழை இலைகளை கிழக்கு முகமாய் பார்த்து ஐந்து வகையான சாதங்களை வைக்க வேண்டும்.


“காக்கப்பிடி வச்சேன் கணுப்பிடி வச்சேன். காக்கைக்கு எல்லாம் கல்யாணம், கண்டவர்க்கெல்லாம் சந்தோஷம், கூடப்பிறந்த சகோதரர்கள் எந்நாளும் குறைவில்லாமல் சந்தோஷமாய் வாழணும்” என்று சொல்லி படையல் வைக்க வேண்டும்.


உடன்பிறந்தவர்கள் உள்ளுரில் இருந்தால் அழைத்து விருந்து கொடுத்து அவர்கள் தரும் அன்பளிப்பை பெற்றுக்கொள்ள வேண்டும். சகோதரிகளையும் உடன் பிறந்தவர்களையும் மாலை அழைத்து விருந்து வைப்பார்கள், அனைவரும் அன்று குடும்பத்தில் ஒன்று கூடி காணப்படுவதனால் தான் இது காணும் பொங்கல் ஆகும். இன்று சிவராத்திரி விரதம் இருந்து ஈசனை வழிபட குடும்பத்தில் நன்மை பெருகும். குடும்பத்துடன் சேர்ந்து சிவனை வழிபட்டு சிறப்பு பெறுவோம்..!

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில்,  திருவூடல் உற்சவ நிறைவு விழாவை யொட்டி,  உண்ணாமுலையம்மன் சமேத ... மேலும்
 
temple news
பல்லடம்; பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அய்யன் கோவிலில் குவிந்த பக்தர்கள், நீண்ட வரிசையில், ரோட்டில் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: கோவை ஈஷா யோகா மையத்தில், ஆதியோகி முன்பு, பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் மாட்டுப்பொங்கல் ... மேலும்
 
temple news
பாகூர்: பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில் உள்ள 8 நந்தி பெருமான்களுக்கும், மாட்டுப் பொங்கலையொட்டி சிறப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar