ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் மகாத்மா காந்தி நினைவுதினம் அனுஷ்டிக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்ட சர்வோதய சங்கம் சார்பில், ஆண்டாள் கோயில் வளாகத்தில், நடந்த நிகழ்ச்சியில், சங்க தலைவர் திருவேங்கடம் தலைமை வகித்தார். செயலாளர் இன்பராஜ் முன்னிலை வகித்தார். பொருளாளர் அழகு மணி உட்பட பலர் கலந்து கொண்டனர். பாடகர் மாரியப்பன் தேச பக்தி , மகாத்மா காந்தியை பற்றிய பாடல்களை பாடினார். அவரது படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பின் ராட்டையில், பஞ்சிலிருந்து நூல் நூற்றனர்.