கம்மாபுரம் :கம்மாபுரம் அடுத்த ஓட்டிமேடு சிவசக்தி கோவிலில், சமயபுரம் மாரியம்மன் வழிபாடு மன்றம் சார்பில் சிறப்பு பூஜை நடந்தது. அதையொட்டி நேற்று காலை 8:00 மணியளவில் அம்மனுக்கு 108 அர்ச்சனை, மகா தீபாராதனை நடந்தது. காலை 10:00 மணிக்கு அம்மன் துதிப்பாடல் பஜனை, பகல் 12:00 மணிக்கு அன்னப்படையல் நிகழ்ச்சியும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.