பதிவு செய்த நாள்
05
பிப்
2014
11:02
செஞ்சி: செஞ்சி தாலுகா புதுப்பாளையத்தில் உள்ள பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில் திருப்பணிகள் செய்து வரும் 9ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. இதை முன்னிட்டு 8ம் தேதி மாலை 4 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், தனபூஜையும், 5 மணிக்கு வாஸ்து சாந்தி, பிரவேச பலி, வேதபாராயணம், திருமுறை பாராயணம், அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனமும், 7 மணிக்கு கும்ப அலங்காரம், கலாகர்ஷனம், யாகசாலை பிரவேசமும், 7.30 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜையும், விசேஷ திரவிய ஹோம மும், 8.30 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், தீபாராதனையும் நடக்கிறது. 9ம் தேதி காலை 4 மணிக்கு வேதபாராயணம், திருமுறை பாராயணம், 4.30 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, விசேஷ ஹோமம், 6 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், 6.15 மணிக்கு கடம் புறப்பாடு, 6.30 மணிக்கு ஸ்ரீசிவ சண்முக ஞானாச்சார்ய குரு சுவாமிகள் தலைமையிலும், செத்தவரை சிவ ஜோதி ஆசிரமம் மோன சித்தர் சுவாமிகள் முன்னிலையிலும் விமானம் மகா கும்பாபிஷேகமும், 7 மணிக்கு மூலவர் மகா கும்பாபிஷேகமும், 8 மணிக்கு மகா தீபாராதனையும் நடக்கிறது. தொடர்ந்து அன்னதானமும், மாலை 7 மணிக்கு வள்ளி, தெய்வானையுடன் சுவாமி வீதியுலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்துள்ளனர்.