பதிவு செய்த நாள்
06
பிப்
2014
10:02
திருத்தணி : திருத்தணி அடுத்த, கே.ஜி.கண்டிகை, சாய்நகரில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவிலில் நேற்று, 11ம் ஆண்டு விழா நடந்தது. காலை, 6:00 மணிக்கு அபிஷேகம் நடந்தது. காலை, 7:30 மணிக்கு கோவில் வளாகத்தில், ஒரு யாகசாலை, 12 கலசங்கள் வைத்து கோ பூஜை, கணபதி ஹோமம், நவகிரகபூஜை., சாய்நாதனின் சகஸ்ரநாம பூஜை மற்றும் மஹன்யாச பூர்வக ஏகாதசி ருத்ராபிஷேகம் நடந்தது. நண்பகல், 11:30 மணிக்கு மூலவர் சாய்பாபாவிற்கு, பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், நெய், சந்தனம், பன்னீர் மற்றும் விபூதி போன்ற பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர், கலசங்கள் ஊர்வலமாக வந்து, மூலவருக்கு கலசநீர் அபிஷேகமும் நடந்தது. மதியம், 12:15 மணிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.