திருப்புவனம் மணி மந்திர விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11பிப் 2014 11:02
திருப்புவனம்: திருப்புவனம் மணி மந்திர விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது.திருப்புவனத்தில் பழமையான மணிமந்திர விநாயகர் கோயில் மெயின் ரோட்டில் உள்ளது. இக் கோயில் தற்போது புதுப்பிக்கப்பட்டு, 62 ஆண்டுக்குப்பின் கும்பாபிஷேகம் நாளை (12ந்தேதி) நடைபெறவுள்ளது. இதில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை, பாலமுருகன் சந்நிதிகள் அமைக்கப்பட்டுள்ளது. முதல்கால யாகசாலை பூஜை நேற்று மாலை 4 மணிக்கு துவங்கியது. இரண்டாம், மூன்றாம், நான்காம் யாக சாலை பூஜை முடிந்து, நாளை காலை 9 லிருந்து 10 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. மணிகண்டன் சிவாச்சாரியார் கும்பாபிஷேகத்தை நடத்தி வைக்கிறார். அன்று காலை பத்தாயிரம் பேருக்கு அன்னதானம், இரவு தேச மங்கையர்க்கரசி ஆன்மிக சொற்பொழிவு, வீரமணியின் இன்னிசை கச்சேரி நடைபெறவுள்ளது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.