பதிவு செய்த நாள்
11
பிப்
2014
11:02
மதுரை: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் தேவஸ்தானம் சார்பில், பக்தர்களின் வசதிக்காக, கிரிவலப் பாதையில் கழிப்பறை, வாகன நிறுத்துமிடம், காலணிகள் பாதுகாக்குமிடம் அமைக்கப்பட்டுள்ளது. உரிமம் இன்றி, கட்டப்பட்டுள்ளதால் அகற்றக்கோரி, பழநி நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது. இதை ரத்து செய்யக்கோரி கோயில் நிர்வாகம், மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தது.நீதிபதிகள் ஆர்.சுதாகர், வி.எம்.வேலுமணி கொண்ட பெஞ்ச் உத்தரவு: பக்தர்களுக்கு பயனுள்ள வகையில், அமைக்கப்பட்டுள்ள அடிப்படை வசதிகளை அகற்றக்கூடாது. வணிக நோக்கத்திற்காக கட்டடம் கட்டியிருந்தால், நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கலாம். அதை சட்டப்படி, அறநிலையத்துறை எதிர்கொள்ளலாம். இவ்வாறு குறிப்பிட்டனர்.