வால்பாறை: அன்னை காமாட்சி அம்மன் கோவிலின் 46ம் ஆண்டு திருவிழாவில், இன்று அம்மனுக்கு அபிஷேக பூஜை நடக்கிறது. வால்பாறை வாழைத்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள அன்னை காமாட்சி அம்மன் கோவிலின் 46ம் ஆண்டு திருவிழாவையொட்டி, கடந்த 6ம் தேதி கோவில் தலைவர் மருதமுத்து திருக்கொடி ஏற்றி விழாவை துவக்கி வைத்தார். விழாவில் இன்று (13ம் தேதி) தெய்வகுலகாளியம்மன் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலிருந்து தீர்த்தம் கொண்டு வரப்படுகிறது. பின்னர் மாலை 4.00 மணிக்கு நடுமலை ஆற்றிலிருந்து கும்பஸ்தாபிதம் செய்து, அம்மனுக்கு அபிஷேக பூஜைகள் செய்யப்படுகிறது. நாளை (14ம் தேதி) காலை 11.00 மணி அளவில் திருக்கல்யாணம் நடக்கிறது. தொடர்ந்து அன்னதானம் வழங்கும் விழாவும் நடக்கிறது.வரும் 15ம் தேதி மாலை 5.00 மணிக்கு, அம்மன் திருத்தேரில் எழுந்தருளி திருவீதி உலா நடக்கிறது.