தஞ்சை மாவட்டம், பந்தநல்லூர் அருகே காகிதப்பட்டறையில் உள்ளது ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில். சோழப்பரம்பரையில் வந்த குந்தைநாச்சியார் அளித்த பொருள் உதவியால் கட்டப்பட்ட இந்தக் கோயிலில் சேவை சாதிக்கும் பெருமாள் ஆற்றல் வாய்ந்தவராகத் திகழ்வதால் குற்றம் செய்தவர்களை இங்கு அழைத்து வந்து இவர் முன் சத்தியம் செய்யச் சொல்கிறார்கள். ஆனால் குற்றவாளிகளோ சத்தியம் செய்யாமல் தவறை ஒப்புக்கொண்டு தண்டனையை ஏற்றுக்கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.