உசிலம்பட்டி அருகே திருமலை நாயக்கர் கால கல்வெட்டுகள்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04மார் 2014 12:03
மதுரை: உசிலம்பட்டி அருகே திருமலை நாயக்கர் காலத்தைச் சேர்ந்த இரண்டு புதிய கல்வெட்டுக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. முதல் கல்வெட்டு கி.பி.1638-ம் ஆண்டைச் சேர்ந்தது. இதில் இரண்டு மீன்களுக்கு நடுவில் ஒரு செங்கோலும் சந்திர சூரியன் அமைப்பும் புகைப்படச் சிற்பமாக வெட்டப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்ட இடத்தின் அருகே <உள்ள நிலத்தில் இன்னொரு கல் நடப்பட்டுள்ளது. இதில் திரிசூலம் ஒன்று கீறல் வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் கீழ் திருமலை நாயக்கர் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டு இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.