ஊமச்சிகுளம் : மதுரை ரிசர்வ்லைன் ராமகிருஷ்ண மடத்தில் பகவான் ராமகிருஷ்ணரின் 179வது ஜெயந்தி விழா நடந்தது. இதை முன்னிட்டு, சாரதா வித்யாலயா பள்ளி மாணவிகளின் ஊர்வலம் நடந்தது.மடத்தின் தலைவர் கமலாத்மானந்தர் பேசியதாவது: இறைவனை அறிவதே ஞானம்; அவரை அறியாதிருப்பது அஞ்ஞானம் என்பதை ராமகிருஷ்ணரின் உபதேசங்களை படிக்கும் போதே தெரிந்து கொள்ளலாம். இறைவனை சாதாரண மனிதர்களாகிய நம்மாலும் அடைய முடியும் என்ற நம்பிக்கை வேண்டும். இறைவனை அடைவதற்கு இருக்கும் தடைகள், அவரை அடைய அன்றாட வாழ்வில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை கூறியுள்ளார், என்றார்.