நீலகிரி: கோத்தகிரியில் பிரசித்தி பெற்ற சக்திமலை முருகன் கோவிலில் சுமங்கலி பூஜை நடைபெற்றது. பூஜையில் முருகருக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடை பெற்றன. பின்னர் மாலையில் 1,008 சுமங்கலி பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சுமங்கலி பூஜை செய்தனர்.