பதிவு செய்த நாள்
13
மார்
2014
11:03
திருவள்ளூர் : மாவட்டத்தில் உள்ள, அனைத்து சிவன் கோவில்களிலும், நாளை (14ம் தேதி), பிரதோஷ சிறப்பு வழிபாடு, நடைபெற உள்ளது. பிரதோஷத்தை முன்னிட்டு, நாளை, திருவள்ளூரை அடுத்துள்ள திருப்பாச்சூர் வாசீஸ்வரர் கோவில், பேரம்பாக்கம் சோளீஸ்வரர் கோவில், மணவாளநகர் மங்களீஸ்வரர் கோவில், திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவில், காக்களூர் பூங்காநகரில் உள்ள சிவா - விஷ்ணு கோவில் ஆகிய கோவில்களில், சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளது. அதேபோல், ஊத்துக்கோட்டை அடுத்துள்ள, சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வரர் கோவில், கும்மிடிப்பூண்டி வில்வநாதீஸ்வரர் கோவில், பஞ்சேஷ்டி அகத்தீஸ்வரர் கோவில், பெருமுடிவாக்கம் கைவீச்சு பார்வதி உடனுறை பரமேஸ்வரர் கோவில், மாதர்பாக்கம் பர்வதவர்த்தினி உடனுறை ராமலிங்கேஸ்வர் கோவில் உட்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் நாளை மாலை, 4:30 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், பிரதோஷ வழிபாடும் நடைபெறுகிறது. மாலை 6:00 மணிக்கு, அனைத்து கோவில்களிலும், ரிஷப வாகனத்தில், பார்வதி சமேத சிவன் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.